என்எஃப்சி தொழில் நுட்பத்தில் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் என்எஃப்சி தொழில் நுட்பம் தான்.
இந்த ஸ்மார்ட்போன் சிறப்பாக இயங்க துணை புரியும் வகையில் 800 மெகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது. எல்ஜி நிறுவனத்தின் இந்த ஸ்மார்ட்போனின் மூலம் என்எஃப்சி தொழில் நுட்ப வசதியினை பெறலாம். இது 3.2 இஞ்ச் அகன்ற திரையினை கொண்டது. தெளிவான தகவல்களை இந்த திரையின் மூலம்
பார்க்கலாம்.
கண்ணுக்கு இனிய புகைப்படங்களை இந்த ஸ்மார்ட்போனில் உள்ள 5 மெகா பிக்ஸல் கேமராவினால் எடுக்க முடியும். கூகுள் டாக், இ-மெயில் போன்ற இன்டர்நெட் சவுகரியங்களையும் இதில் பெறலாம். இதில் உள்ள ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் பேட்டரி வசதயின் மூலம் 6 மணி நேரம் டாக் டைம் கிடைக்கும்.
இதனால் இதில் இருக்கும் 3ஜி நெட்வொர்க், கேம் டவுன்லோடிங் போன்ற சவுகரியங்களை பயன்படுத்தலாம்.
இதன் விலையை பற்றி இன்னும் சரியாக தெரியவரவில்லை. கூடிய விரைவில் இதன் விலை விவரம் வெளியாகும்.
புதிய தொழில் நுட்பத்தினை பயன்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு இந்த எல்ஜி ஆப்டிமஸ் எலைட் ஸ்மார்ட்போன் சரியான தேர்வாகத்தான் இருக்கும்.


Click it and Unblock the Notifications