Home
Mobile

எல்ஜி மற்றும் வியூசோனிக் ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீட்டு அலசல்!

By Super

எல்ஜி மற்றும் வியூசோனிக் ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீட்டு அலசல்!
இந்த மாதம் அறிமுகமான இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்களை இங்கே கொஞ்சம் காண்போம். எல்ஜி ஆப்டிமஸ் எலைட் மற்றும் வியூசோனிக் வியூபோன்-3 என்ற இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் தொழில் நுட்ப பயன்பாடுகள் என்ன என்பதை பார்க்கலாம்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களின் திரையும் ஒரே அளவினை கொண்டது தான். 3.5 இஞ்ச் அகன்ற திரை வசதியினை கொடுக்கும் இந்த ஸ்மார்ட்போன்களின் திரையில் எந்த தகவல்களையும் தெளிவாக பார்க்கலாம். இந்த திரை 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை கொடுக்கும்.

எல்ஜி எலைட் ஸ்மார்ட்போன் டிஎப்டி தொழில் நுட்பம் கொண்ட திரையினை வழங்கும். வியூசோனிக் வியூபோன்-3 ஸ்மார்ட்போனும் சிறப்பான தொடுதிரை வசதியினை வழங்கும் ஸ்மார்ட்போன்.

இந்த ஸ்மார்ட்போன்கள் ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும். இதன் இயங்குதளம் சிறப்பாக இயங்க இந்த ஸ்மார்ட்போன்கள் 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் வசதியினையும் கொடுக்கும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம்அழகான, துல்லியமான புகைப்படத்தினை கொடுக்கும்.

எலைட் மற்றும் வியூபோன்-3 ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களின் மெமரி வசதியினையுமே 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ள இதன் மைக்ரோஎஸ்டி ஸ்லாட் சப்போர்ட் செய்கிறது. ஜிபிஆர்எஸ் தொழில் நுட்ப வதியினை வியூபோன்-3 ஸ்மார்ட்போனில் எளிதாக பெறலாம்.

ஆனால் எல்ஜி ஆப்டிமஸ் எலைட் ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்ப வசதி கொடுக்கப்படவில்லை. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 3ஜி நெட்வொர்க் வசதியினை எளிதாக பயன்படுத்தலாம்.

எல்ஜி எலைட் ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் தொழில் நுட்பம் இல்லை என்றாலும் வைபை தொழில் நுட்பம் கொண்டது. வியூபோன்-3 ஸ்மார்ட்போனிலும் வைபை தொழில் நுட்பத்தினை பயன்படுத்தலாம்.

இந்த ஸ்மார்ட்போன்களில் பொழுதுபோக்கு அம்சங்களாக ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர், எப்எம் ரேடியோ, கேம்ஸ் என்று பல அம்சங்களும் உண்டு. எல்ஜி எலைட் ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,520 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 7 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைமினை பெறலாம். வியூபோன்-3 ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு 1,500 எம்ஏஎச் பேட்டரியினை கொண்டது.

வியூசோனிக் வியூபோன்-3 ஸ்மார்ட்போன் ரூ.10,000 விலை கொண்டதாக இருக்கும். எல்ஜி ஆப்டிமஸ் எலைட் ஸ்மார்ட்போனின் விலை இன்னும் சரிவர வெளியாகவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X