எல்ஜி ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி - ஒரு சிறப்பு பார்வை

சமீபத்தில் எல்ஜி நிறுவனம் ஆப்டிமஸ் 4எக்ஸ் எச்டி என்று புதிய போனைக் களமிறக்கியது. இந்த போன் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றுள்ளது. இந்த போனில் ஏராளமான தொழில் நுட்ப வசதிகள் உள்ளன.
குறிப்பாக இந்த போன் 4.7 இன்ச் அளவில் ஒரு பெரிய ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டுள்ளது. இந்த டிஸ்ப்ளே மிகத் தெளிவாக இருக்கும். இதில் இருக்கும் எல்இடி ப்ளாஷ் கொண்ட 8எம்பி கேமரா மிக சூப்பாரன போட்டோக்களை எடுக்கும். அதுபோல் இதன் 1.3எம்பி முகப்புக் கேமரா சிறந்த வீடியோ உரையாடலை நடத்த உதவும்.
இந்த போன் பார்ப்பதற்கு மிக அழகாகவும் அதே நேரத்தி்ல் மிக ஸ்டைலாகவும் இருக்கிறது. மேலும் இந்த போன் மிக உறுதியாகவும் இருக்கிறது. ஏனெனில் இந்த போன் க்வாட்கோர் என்விடியா டேக்ரா 3 ப்ராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால் இது விரைவாக இயங்கும் என்று நம்பலாம்.
இணைப்பு வசதிகளுக்காக இந்த போனில் வைபை, ப்ளூடூத், சவுண்ட் மற்றும் குயிக்மெமோ போன்ற வசதிகளும் உள்ளன. இதற்கான ஷார்ட் க்ட்டுகளும் இந்த போனில் உள்ளன. அதனால் இந்த இணைப்பு வசதிகளை மிக எளிதாகப் பயன்படுத்தலாம்.
ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் இந்த போன் இந்திய சந்தையில் ரூ.32,999க்கு விற்கப்படுகிறது.
Comments
Best Mobiles in India


Click it and Unblock the Notifications
