ஆப்டிமஸ் வரிசையில் புதிய ஸ்மார்ட்போனை களமிறக்கும் எல்ஜி!

பல சிறந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்களை கொடுத்து, வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது எல்ஜி நிறுவனத்தின் ஆப்டிமஸ் வரிசை ஸ்மார்ட்போன்கள்.
அந்த வகையில் அதே ஆப்டிமஸ் வரிசையில் 4-எக்ஸ் எச்டி என்ற ஸ்மார்ட்போனை வழங்குகிறது எல்ஜி. இந்த ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் அகன்ற திரையை கொண்டது.
பெரிய திரைகள் தான் ஒரு ஸ்மார்ட்போனுக்கு பிரம்மாண்ட தோற்றத்தினையே கொடுக்கிறது. அந்த வகையில் இந்த ஆப்டிமஸ் 4-எக்ஸ் எச்டி ஸ்மார்ட்போன் பெரிய திரையில் எந்த தகவல்களையும் தெளிவாக கொடுக்கும்.
இதில் உள்ள ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் நவீன் தொழில் நுட்ப வசதிகளை பயன்படுத்த உதவும்.
இதன் 2,150 எம்ஏச் பேட்டரி இன்னும் சிறப்பான ஆற்றலை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 8 மெகா பிக்ஸல் கேமராவில் புகைப்படங்களையும், வீடியோ ரெக்கார்டிங் வசதிகளையும் சிறப்பாக பெறுவதோடு, வீடியோ காலிங் வசதியினையும் இதன் முகப்பு கேமரா மூலம் பெறலாம்.
இதில் உள்ள 16 ஜிபி இன்டர்னல் மெமரி வசதி உள்ளதால், வேண்டிய தகவல்களை எளிதாக இதில் ஸ்டோர் செய்யலாம். பல புதிய நவீன வசதிகளை வழங்கும் இந்த ஸ்மார்ட்போன் ரூ. 34, 990 விலையில் கிடைக்கும். இந்த ஸ்மார்ட்போன் கூடிய விரைவில் வெளியிடப்படும்.


Click it and Unblock the Notifications