மனதை திசை திருப்ப வரும் ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

Posted By:
    X

    மனதை திசை திருப்ப வரும் ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போன்!

    எல்ஜி நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் மற்றும் மொபைல் சாகசங்கள் எல்லை கடந்து சென்று கொண்டு இருக்கிறது. எல்ஜி புதிய 3டி தொழில் நுட்பம் கொண்ட ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். ஆனால் இந்த புதிய ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் புதிய ஆன்ட்ராய்டு ஐஸ்கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்டேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    3டி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் இதில் 4.3 இஞ்ச் திரையையும் வழங்கும். இந்த ஸ்மார்ட்போனில் உள்ள அகன்ற திரையினால் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தையும் இந்த ஸ்மார்ட்போனில் பெறலாம். மிக உயர்ந்த தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் சிறப்பான பாதுகாப்பிற்காக கொரில்லா கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது.

    5 மெகா பிக்ஸல் கேமராவின் மூலம் சிறப்பான புகைப்படங்களை எடுத்து ரசிக்கலாம். ஒரு கேமரா அல்ல, இந்த ஸ்மார்ட்போனில் டியூவல் கேமரா வசதி உள்ளதால் முகப்பு கேமராவும் இதில் உள்ளது. இதில் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் கார்டெக்ஸ்-ஏ9 பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.  3டி தொழில் நுட்பத்துடன் சேர்த்து, இதில் 3ஜி நெட்வொர்க் வசதியையும் பெறலாம். ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பமும் உள்ளது. இதனால் சுலபமாக பிரவுசிங் வசதியையும் எளிதாக பயன்படுத்தலாம்.

    தொழில் நுட்ப தகவல்களை மட்டும் வெளியிட்டு இருக்கும் இந்த ஸ்மார்ட்போன், இன்னும் இதன் விலை சரிவர வெளியாகவில்லை. அப்டேஷன் வசதிகளையும் வழங்க இருக்கும் இந்த எல்ஜி ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் ஸ்மார்ட்போனின் விலை கூடிய விரைவில் வெளியாகும்.

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more