எல்ஜி வழங்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

By Karthikeyan
|
எல்ஜி வழங்கும் புதிய ஸ்மார்ட்போன்கள்!

எல்ஜியின் மின்னனு பொருள்களுக்கு இந்தியாவில் அமோக வரவற்பு உண்டு. மொபைல் தயாரிப்பில் பல்லாண்டுகளாக ஈடுபட்டு வரும் எல்ஜி சமீபத்தில் தனது இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கிறது.

இந்த புதிய மொபைல் போன்களுக்கு எல்ஜி ஆப்டிமஸ் 3டி மேக்ஸ் மற்றும் எல்ஜி ஆப்டிமஸ் எல்7 என்ற பெயர்கள் சூட்டப்பட்டிருக்கின்றன. இதில் 3டி மேக்ஸ் ரூ.30,500க்கும், ஆப்டிமஸ் எல்7 ரூ.19,900க்கும் விற்கப்படும்.

இந்த ஸ்மார்ட்போன்கள் பல சூப்பரான தொழில் நுட்பங்களைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக 3டி மேக்ஸ் 4.3 இன்ச் டிஸ்ப்ளே மற்றும் டபுள்யுவிஜிஎ ரிசலூசனைக் கொண்டிருக்கிறது. மேலும் ட்ரை-டூவல் 1.2 ஜிஹெர்ட் ஒஎம்எபி4430 ப்ராசஸர், 1 ஜிபி ரேம், 8ஜிபி சேமிப்பு, இரண்டு 5 எமபி கேமராக்கள் 3டி போட்டோ எடுக்கும் வசதி மற்றும் அருமையான பேட்டரி என்று சூப்பரான வசதிகளுடன் வருகிறது.

மேலும் இந்த மொபைல் ஆன்ட்ராய்டு 2.3 ஜிஞ்சர் ப்ரீடு இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த மொபைலில் 3டி மற்றும் 2டி காட்சிகளைப் பார்க்க முடியும்.

அடுத்ததாக ஆப்டிமஸ் எல்7 ஸ்மார்ட் போன் ஆன்ட்ராய்டு 4.0 ஐஸ் க்ரீம் சான்ட்விஜ் இயங்கு தளத்தில் இயங்குகிறது. இந்த மொபைல் பார்ப்பதற்கு படு ஸ்டைலாக இருக்கிறது. அதே நேரத்தில் ஏராளமான தொழில் நுட்பங்களையும் இந்த மொபைல் கொண்டு வருகிறது.

குறிப்பாக இந்த ஆப்டிமஸ் எல்7 மொபைல் 4.3 இன்ச் டபுள்யுவிஜிஎ டிஸ்ப்ளே 480x800 பிக்சலை வழங்குகிறது. அதுபோல் எல்இடி ப்ளாசுடன் கூடிய 5 எம்பி பின்பக்க கேமராவையும் மற்றும் 1.3 எம்பி முகப்பு கேமராவையும் கொண்டிருக்கிறது.

மெல்லியதாக இருக்கும் இந்த மொபைல் சிங்கிள் கோர் 1 ஜிஹெர்ட்ஸ் க்வல்காம் ஸ்நாப்ட்ராகன் மொபைல் ப்ராசஸரைக் கொண்டிருக்கிறது. மேலும் 4ஜிபி சேமிப்பு வசதி கொண்ட 1ஜிபி ரேமையும் இந்த மொபைல் கொண்டிருக்கிறது. மேலும் ப்ளூடூத், வைபை மற்றும் ஜிபிஎஸ் இணைப்புகளும் இந்த மொபைலில் உண்டு.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X