Home
Mobile

மனதை திருட வரும் புதிய ஆப்டிமஸ் 3டி ஸ்மார்ட்போன்!

By Super

மனதை திருட வரும் புதிய ஆப்டிமஸ் 3டி ஸ்மார்ட்போன்!
எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் கொண்ட ஸ்மார்ட்போன்கள் வெளி வந்தாலும், 3டி தொழில் நுட்பம் கொண்ட ஸ்மார்ட்போன்கள் மிகவும் குறைவாக தான் வெளி வருகிறது. அந்த ஒரு சில நிறுனத்தின் பெயர்களில், எல்ஜி நிறுவனத்திற்கு ஒரு பெரிய பங்கு இருக்கிறது.

ஆப்டிமஸ் 3டி என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டு, ஒட்டு மொத்த வாடிக்கையாளர்களின் வாக்குகளையும் பெற்றது எல்ஜி நிறுவனம். இதே எல்ஜி புதிய ஆப்டிமஸ் 3டி 2 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இதற்கு சிஎக்ஸ்-2 என்ற பெயரும் உண்டு.

வருகிற மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் நிகழ்ச்சியில் இந்த எல்ஜி ஆப்டிமஸ் 3டி ஸ்மார்ட்போன் அதிகார பூர்வமாக அறிமுகம் செய்யப்படும். இந்த புதிய ஆப்டிமஸ் 3டி ஸ்மார்ட்போனில் டபிள்யூவிஜிஏ என்ஓவிஏ தொழில் நுட்பம் கொண்ட 4.3 இஞ்ச் தொடுதிரை வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

இது டியூவல் கோர் 1 அல்லது 1.2 ஜிகாஹெர்ட்ஸ் டிஐ ஓஎம்ஏபி பிராசஸர் கொண்டதாக இருக்கும். எல்ஜி ஆப்டிமஸ் 3டி 2 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜின்ஜர்பிரெட் வெர்ஷன் ஓஎஸ் தொழில் நுட்பத்தினை வழங்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் அதி உயர்ந்த தொழில் நுட்பங்களை வழங்கும்.

ஆப்டிமஸ் 3டி 2 ஸ்மார்ட்போன் 3ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்யும். இத்தனை வசதிகள் இருக்கையில் கேமரா வசதி மட்டும் குறைவாக இருக்குமா என்ன? ஒன்றுக்கு இரண்டு கேமராக்களை கொடுக்கும். 5 மெகா பிக்ஸல் கொண்ட கேமராவையும், செகன்டரி கேமராவையும் இந்த ஸ்மார்ட்போன் வழங்கும்.

3டி ஆர்வலர்களுக்கு இந்த ஸ்மார்ட்போனில் பெரிய வேட்டை காத்து இருக்கிறது. வருகிற பிப்ரவரி மாதத்தில் அறிமுகமாக இருக்கும் இந்த ஆப்டிமஸ் 3டி 2 ஸ்மார்ட்போன், கூடிய விரைவில் மொபைல் சந்தையை முற்றுகையிடும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X