அதிவேக பிரவுசிங் வசதியுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்!

பலரது ஆசையை நிறைவேற்ற எல்ஜி முடிவெடுத்து இருக்கிறது போலும். கடந்த ஆண்டு எல்ஜி ஆப்டிமஸ் என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்ட எல்ஜி நிறுவனம், ஆப்டிமஸ்-2 என்ற ஸ்மார்ட்போனை உருவாக்கி இருக்கிறது.
இது 3.2 இஞ்ச் தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட்போன் என்பதால் சிறப்பான முறையில் தகவல்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம். எல்லா மொபைல்களிலுமே கேமரா முக்கிய பங்கு வகிக்கிறது உண்மை தான். இதிலும் 3.2 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் ஜிபிஆர்எஸ், எட்ஜ் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி பிரவுசிங் வசதியை தங்குதடை இன்றி பெறலாம். 3ஜி தொழில் நுட்பத்தினை பயன்படுத்த வேண்டும் என்பது பலரது கனவு. அந்த கனவு இந்த எல்ஜி ஆப்டிமஸ்-2 ஸ்மார்ட்போனில் நனவாகும். இந்த ஸ்மார்ட்போன் எச்எஸ்டிபிஏ தொழில் நுட்பத்திற்கு சப்போர்ட் செய்யும்.
இதில் 32ஜிபி வரை எக்ஸ்பேன்டபில் மெமரி வசதியினை பெற முடியும். தகவல் பரிமாற்றம் மற்றும் தகவல் பதிவேற்றம் போன்ற வசதியும் இதில் உள்ளது. அதி நவீன தொழில் நுட்பங்களை பெற்றிருக்கும் இந்த ஸ்மார்ட்போனின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் எல்ஜி ஆப்டிமஸ்-1 ஸ்மார்ட்போனைவிட இந்த எல்ஜி ஆப்டிமஸ்-2 ஸ்மார்ட்போனின் விலை சற்று அதிகமாக இருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications