Home
Mobile

3 புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் எல்ஜி!

By Super

3 புதிய ஸ்மார்ட்போன்களை களமிறக்கும் எல்ஜி!
புதிய புதிய ஸ்மார்ட்போன்கள் எலக்ட்ரானிக் மார்கெட்டில் வந்து குவிந்த வண்ணம் இருக்கிறது. எல்ஜி நிறுவனம் தனது எல் வரிசை ஸ்மார்ட்போன்களில் எல்-7, எல்-5 மற்றும் எல்-3 என்ற ஸ்மார்ட்போன்களை அதிகார பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இனி இந்திய மொபைல் மார்கெட்டிலும் இந்த எல்ஜி எல் வரிசை ஸ்மார்ட்போன்களை பெறலாம். எல்-7 ஸ்மார்ட்போன் 1 ஜிகாஹெர்ட்ஸ் சிங்கிள் கோர் பிராசஸரை கொண்டது.

இந்த எல்-7 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டது. இதன் 5 மெகா பிக்ஸல் கேமரா சிறப்பான செயல்பாட்டினை கொண்டது.

இப்போதெல்லாம் ஸ்மார்ட்போன் என்றாலே இந்த திரை பெரியதாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். நண்பர்கள் முன்பு புதிய தொழில் நுட்பத்தினை கொண்ட ஸ்மார்ட்போனை காட்ட வேண்டும் என்று பலரும் விரும்புகின்றனர்.

என்னதான் புதிய தொழில் நுட்பம் இருந்தாலும், எல்லோரையும் பிரம்மிக்க வைப்பது ஸ்மார்ட்போன்களின் திரை அம்சம் தான்.

எல்-5 ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். 800 மெகாஹெர்ட்ஸ் பிராசஸர் கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்குதளத்தில் இயங்கும்.

ஆனால் அடுத்ததாக கூறப்பட்ட எல்-3 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். 3 மெகா பிக்ஸல் கேமராவும் இதில் உள்ளது. அதே போல் மேல் கூறப்பட்ட மற்ற இரண்டு ஸ்மார்ட்போன்களையும் விட இந்த எல்-3 ஸ்மார்ட்போன் சற்று குறைவாக 3.2 இஞ்ச் திரை வசதியினை கொண்டது.

எல்-7 ஸ்மார்ட்போன் ரூ. 19,900 விலையினையும், எல்-5 ஸ்மார்ட்போன் ரூ. 13,199 விலையையும், எல்-3 ஸ்மார்ட்போன் ரூ. 8,895 விலையிலும் கிடைக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X