Home
Mobile

எல்ஜியின் நைட்ரோ, ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு அலசல்

By Super

எல்ஜியின் நைட்ரோ, ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போன்களின் ஒப்பீட்டு அலசல்
எல்லா விதமான மின்னனு சாதனங்களின் மார்க்கெட்டையும் ராக்கெட் வேகத்தில் மிஞ்சி வருகிறது மொபைல் மார்க்கெட். இதனால், இந்த மார்க்கெட்டில் நிறுவனங்களுக்கு இடையே போட்டா போட்டி நிலவுகிறது. போட்டியை சமாளிக்க ஒரே ரகத்தில் கூடுதல் வசதிகளுடன் மொபைல்போன்களை அறிமுகப்படுத்த நிறுவனங்கள் முனைப்பு காட்டி

வருகின்றன.

இந்த வகையில், மலிவான விலையிலும், அதிக விலையிலும் சிறந்த தொழில் நுட்பங்களை கொடுத்து வெற்றியை பெற்று இருக்கிறது எல்ஜி நிறுவனம். எல்ஜி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே சில ஒப்பீட்டு தகவல் துளிகள்.

எல்ஜி நைட்ரோ மற்றும் எல்ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே சிறந்த தொழில் நுட்பம் கொண்டவை.

எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போன் 4.5 இஞ்ச் மல்டி டச் திரை வசதியினை பெற்றுள்ளது. இதனால் 720 X 1280 பிக்ஸல் துல்லியத்தினை பெறலாம்.

எல்ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனும் 4.5 எல்சிடி மல்டி டச் தொடுதிரை கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனின் திரை மூலமும் 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியத்தினை பெறலாம். எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போன் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3.5 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு வெகு ஸ்மார்டாக இயங்கும். இந்த ஸ்மார்ட் இயக்கத்திற்கு டியூவல் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர் துணை புரிகிறது. இதில் 220 கிராஃபிக்ஸ் தொழில் நுட்பமும் உள்ளது.

எல்ஜி ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனிலும் கூகுள் ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இருக்கிறது. இந்த ஓஎஸ் அற்புதமாக இயங்க இதிலும் டியூவல் கோர் 1.5 ஜெகாபெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் அதி வேகத்தினை பெற முடியும்.

எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போனில் ஐஸ்கிரீம் சான்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் அப்கிரேட் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு அடுத்ததாக வாடிக்கையாளர்கள் கேமரா வசதிக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போனில் 2 கேமராக்கள் உள்ளன. இதில் உள்ள 8 மெகா பிக்ஸல் கேமரா அதிகபட்சமாக 3264 X 2448 பிக்ஸல் துல்லியத்தினை தருகிறது. இதன் செகன்டரி கேமராவின் மூலம் வீடியோ கான்ஃபிரன்ஸிங் வசதியினையும் பெறலாம். 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் செய்யலாம்.

ஸ்பெக்ட்ரம் ஸ்மார்ட்போனிலும் 8 மெகா பிக்ஸல் கேமரா உள்ளது. புகைப்படமோ, வீடியோ ரெக்கார்டிங்கோ! தெளிவாக பெற இந்த கேமரா 3264 X 2448 துல்லியத்தினை வழங்கும். வீடியோ காலிங் வசதிக்காக 1.3 மெகா பிக்ஸல் கொடுக்கும் செகன்டரி கேமராவும் இதில் உள்ளது.

இந்த 2 ஸமார்ட்போனிலும் புளூடூத் மற்றும் யூஎஸ்பி போர்ட் வசதியியும் இருக்கிறது. இதன் மூலம் தகவல் பரிமாற்றமோ, தகவல் பதிவேற்றமோ செய்யலாம். இந்த 2 மொபைல்களிலும் ஜோரான வசதிகளை கொடுக்கும் தொழில் நுட்பங்களை கொடுத்துள்ளது எல்ஜி நிறுவனம்.

வைபை, 3ஜி, 4ஜி ஆகிய தொழில் நுட்பங்கள் எல்ஜி நைட்ரோ, எல்ஜி ஸ்பெக்ட்ரம் என்ற இந்த ஸ்மார்ட்போன்களை, டேப்லட்டுக்கு சமமாக காட்டுகிறது. அந்த அளவு இதில் நவீன வசதிகள் உள்ளது.

அரிய தொழில் நுட்பம் கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களின் விலையும், வெளியாகும் தேதியும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கண்களை கவரும் இந்த ஸ்மார்ட்போன் போல, இதன் விலையும் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் இருக்கும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X