எல்ஜி நைட்ரோ, எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீடு

By Super
|

எல்ஜி நைட்ரோ, எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீடு
ஸ்மார்ட்போன் போட்டி என்று எடுத்து கொண்டால் அதில் நிச்சயம் எல்ஜி நைட்ரோ மற்றும் எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன்கள் பங்கு பெறும். இந்த 2 ஸ்மார்ட்போன்களுமே ஆன்ட்ராய்டு தொழில் நுட்பம் கொண்டது. அதில் சிறிய வித்தியாசம் மட்டும் தான் உள்ளது.

எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3.5 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும், எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன் ஆன்ட்ரய்டு வி2.3.4 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தையும் கொண்டது. இதனால் சிறந்த தொழில் நுட்பத்தினை இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே பெறலாம். இது போன்ற ஓஎஸ்கள் சரியாக இயங்க பவர்ஃபுல் பிராசஸர் நிச்சயம் அவசியமாகிறது.

எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போனில் டியூவல் கோர் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது. எச்டிசி விவிட் ஸ்மார்ட்போனில் ஏபிகியூ8060 ஸ்னாப்டிராகன் பிராசஸர் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் இந்த 2 ஸ்மார்ட்போன்களின் ஆப்பரேட்டிங் சிஸ்டமும் சிறப்பாக இயங்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. புதிய புதிய ஓஎஸ் தொழில் நுட்பங்கள் வந்தாலும், அதிகமான வாடிக்கையாளர்கள் ஆன்ட்ராய்டு ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இருந்து மாற விரும்புவதில்லை. அதற்கு காரணம் ஏராளமான தொழில்நுட்ப வசதிகளை பெறமுடியும் என்பதுதான்.

நைட்ரோ ஸ்மார்ட்போன் எல்சிடி மல்டி டச் தொடு திரை வசதியை கொண்டது. எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன் எஸ்-எல்சிடி மல்டி தொடுதிரை வசதியை கொண்டது. இந்த திரை தொழில் நுட்பம் கொண்ட எல்ஜி, எச்டிசி ஸ்மார்ட்போன்களின் திரையும் சிறப்பானதாக இருக்கிறது.

எல்ஜி நைட்ரோ ஸ்மார்ட்போனின் 4.5 இஞ்ச் திரை 720 X 1280 பிக்ஸல் திரை துல்லியம் கொண்டது. எச்டிசி விவிட் ஸ்மார்ட்போன் எஸ்-எல்சிடி மல்டி தொடுதிரை வசதியை கொண்டது. இந்த ஸ்மார்ட்போன் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தை கொடுக்கும்.

இந்த 2 ஸ்மார்ட்போன்களும் 8 மெகா பிக்ஸல் கேமராவினை வழங்கும். இதனால் சிறந்த புகைப்படத்தினை எளிதாக பெறலாம். எச்டிசி விவிட், எல்ஜி நைட்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன்களிலும் 1.3 மெகா பிக்ஸல் செகன்டரி கேமராவும் உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களில் 1080பி துல்லியத்தில் வீடியோ ரெக்கார்டிங் வசதியையும் பெறலாம்.

நைட்ரோ மற்றும் விவிட் ஸ்மார்ட்போன் 3ஜி, 4ஜி நெட்வொர்க் வசதிக்கு சப்போர்ட் செய்கிறது. இப்படி இதில் உயர்ந்த தொழில் நுட்பங்கள் உள்ளதால் இதன் அடுத்த கேள்வி பேட்டரி பற்றி நிச்சயம் வரும்.

நைட்ரோ ஸ்மார்ட்போனில் 1830 எம்ஏஎச் எல்ஐ-அயான் பேட்டரி உள்ளதால், இதில் 252 மணி நேரம் ஸ்டான்-பை டைமையும், 3 மணி நேரம் டாக் டைம் வசதியையும் தரும். எச்டிசி விவிட் ஸ்மார்ட்போனில் 1620 எம்ஏஎச் பேட்டரி உள்ளதால் இதில் 288 மணி நேரம் ஸ்டான்-பை மற்றும் 7 மணி நேரம் டாக் டைம் வசதியினையும் பெறலாம்.

அதி நவீன தொழில் நுட்பங்களை வழங்கும் இந்த கவர்ச்சிகரமான ஸ்மார்ட்போன்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

Most Read Articles
Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X