உயர்ந்த ரக தொழில் நுட்பம் கொண்ட எல்ஜி நைட்ரோ மொபைல்!

Posted By: Staff
உயர்ந்த ரக தொழில் நுட்பம் கொண்ட எல்ஜி நைட்ரோ மொபைல்!
எலக்ட்ரானிக் சாதனங்களை கொடுத்து பல அரிய சாதனைகளை படைத்திருக்கிறது எல்ஜி.

அந்த வகையில், நைட்ரோ எச்டி என்ற ஸ்மார்ட் மொபைலை அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம்.

இந்த மொபைல் விலையிலும் சரி, தோற்றத்திலும் சரி அனைவரையும் கவரும் வண்ணம் இருக்கும் என்று கூறலாம்.

அகலமான திரை கொண்ட மொபைலை பயன்படுத்துவது என்பது அனைத்து வகையான வாடிக்கையாளர்களும் விரும்பும் ஒரு விஷயமாகும்.

ஏனென்றால் இது போன்ற பெரிய திரை மொபைலுக்கு ஒரு கம்பீரமான தோற்றத்தை அளிக்கிறது.

அந்த வகையில் இந்த எல்ஜி நைட்ரோ எச்டி மொபைலும் 4.5 இஞ்ச் அகன்ற திரையை கொடுப்பதாக இருக்கும்.

இது எச்டி-ஐபிஎஸ் எல்சிடி தொடு திரை வசதியை கொண்டிருக்கும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

ஓஎஸ் தொழில் நுட்பத்தை பொறுத்த வரையில் நைட்ரோ எச்டி மொபைலில் எந்த விதமான குறைபாடும் இருக்காது.

ஏனென்றால் இதில் ஆன்ட்ராய்டு வி.4.0 ஐஸ் க்ரீம் சேன்ட்விஜ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டதாக இருக்கும் என்பதால் குறையிருக்காது.

இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்துக்கு  1.5 ஜிஎச்இசட் ஸ்கார்பியன் டியூவல் கோர் பிராசஸர் துணை புரிகிறது.

நைட்ரோ எச்டி மொபைலில் 1ஜிபி ரேம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. 4ஜிபி இன்டர்னல் மெமரி ஸ்டோரேஜ் வசதியின் மூலம் அதிக தகவல்களை சேமிக்க முடியும்.

எக்ஸ்டர்னல் மெமரியை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம்.

இந்த மொபைலில் உள்ள எட்ஜ் தொழில் நுட்பத்தினால் அந்த நெட் பிரவுசிங் வசதியினை எளிதாக பெறலாம்.

இதில் வைபை புளூடூத், யூஎஸ்பி போன்றவற்றின் மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ளவும், பதிவேற்றம் செய்யவும் முடியும்.

1,830 எம்ஏஎச் ரிமூவபுல் பேட்டரி மூலம் மிக அதிகமான டாக் டைம் மற்றும் ஸ்டான்-பை டைமை வழங்க முடியும்.

இதுவரை வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தொழில் நுட்பத்தினை மொபைலின் மூலம் கொடுத்து மகிழ செய்த எல்ஜி நிறுவனம், இந்த நைட்ரோ எச்டி மொபைலின் மூலமும் ஒட்டு மொத்த மக்களின் பாராட்டை பெற முயற்சிக்கிறது என்று கூறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்