நெக்சுஸ் 4 மற்றும் கேலக்ஸி எஸ்3 - ஒரு ஒப்பீடு

By Karthikeyan
|
நெக்சுஸ் 4 மற்றும் கேலக்ஸி எஸ்3 - ஒரு ஒப்பீடு

தற்போது மொபைல் போன்களைப் பயன்படுத்துவோர் பெரிய திரைகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களை மிகவும் விரும்பி வாங்குகின்றனர். அதனால் மொபைல் நிறுவனங்களும் மிகப் பெரிய திரைகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களைக் களமிறக்கி வருகின்றன. அதன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றி வருகின்றன.

குறிப்பாக இந்த ஆண்டு மட்டும் பெரிய திரையிடன் கூடிய பல சூப்பரான ஸ்மாரட்போன்கள் வெளிவந்தன. அந்த வகையில் பெரிய திரைகளில் வந்திருக்கும் நெக்சுஸ் 4 மற்றும் சாம்சங் கேலக்ஸி எஸ்3 ஆகிய போன்கள் மக்களிடம் பெரிதும் வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் வரும் இந்த இரண்டு போன்களும் சந்தையில் 68.1 சதவீத விற்பனையப் பெற்றுள்ளன. விலையைப் பொறுத்தமட்டில் 16ஜிபி கேலக்ஸி எஸ்3 போன் இந்தியாவில் ரூ.34,900க்கு விற்கப்பட்டு வருகிறது. ஆனால் நெக்சுஸ் 4 போன் இந்தியாவில் இன்னும் விற்பனைக்கு வரவில்லை. ஆனால் இபே ஆன்லைனில் இந்த போனை விண்ணப்பித்து வாங்கலாம்.

இந்த இரண்டு போன்களும் பல சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகின்றன. குறிப்பாக நெக்சுஸ் 139 கிராம் எடையுடனும், கேலக்ஸி எஸ்3 போன் 133 கிராம் எடையுடனும் வருகின்றன.

நெக்சுஸ் போன் 4.7 இன்ச் அளவில் ஒரு ஐபிஎஸ் டிஸ்ப்ளேயைக் கொண்டிருக்கிறது. ஆனால் எஸ்3 போன் 4.8 இன்ச் அளவில் ஒரு சூப்பர் அமோலட் கப்பாசிட்டிவ் தொடுதிரையுடன் வருகிறது.

ப்ராசஸரை எடுத்துக் கொண்டால் நெக்சுஸ் 4 போன் 1.5ஜிஹெர்ட்ஸ் குவல்காம் சினாப்ட்ராகன் எஸ்4 ப்ரோ ப்ராசஸரையும் மற்றும் 3டி வசதிகளையும் கொண்டிருக்கிறது. அதோடு இந்த போனில் பல வேலைகளை ஒரே நேரத்தில் செய்ய முடியும். அதோடு இதில் சூப்பரான வீடியோ கேமையும் விளையாடலாம். அதோடு இதில் க்ராபிக்ஸ் வேலைகளையும் செய்ய முடியும். அதே நேரத்தில் கேலக்ஸி எஸ்3 போன் எக்ஸினோஸ் 4412 குவாட் சிப்செட் மற்றும் 3டி வசதியுடன் வருகிறது.

இயங்கு தளத்தைப் பொருத்தவரை நெக்சுஸ் 4 போன் ஆன்ட்ராய்டு 4.2 ஜெல்லி பீன் இயங்கு தளத்தில் வருகிறது. ஆனால் ஆன்ட்ராய்டு ஐசிஎஸ் இயங்கு தளத்தில் வந்த எஸ்3 போன் தற்போது ஆன்ட்ராய்டு 4.1 ஜெல்லி பீன் இயங்கு தளத்தை அப்டேட் தற்போது அப்டேட் செய்திருக்கிறது.

ஆன்ட்ராய்டு இயங்கு தளத்தில் இந்த இரு ஸ்மார்ட்போன்களும் வருவதால் போட்டோ ஸ்பியர் கேமரா, செய்கை டைப்பிங், மிராகாஸ்ட், டேட்ரீம், மேம்படுத்தப்பட்ட வசதிகள், விரைவு செட்டிங்குகள் மற்றும் பல வசதிகளை இவற்றில் அனுபவிக்கலாம்.

இரண்டு போன்களும் பின்புறம் ஆட்டோ போக்கஸ், எல்இடி ப்ளாஷ், ஜியோ டேக்கிங் மற்றும் டச் போக்கஸ் மற்றும் பேஸ் டிடக்சன் வசதிகள் கொண்ட 8எம்பி கேமராவைக் கொண்டிருக்கின்றன. ஆனால் நெக்சுஸ் 4 ஸ்மார்ட்போன் 1.3எம்பி முகப்புக் கேமராவையும், எஸ்3 போன் 1.9எம்பி முகப்புக் கேமராவையும் கொண்டிருக்கிறது.

சேமிப்பு வசதிகளுக்காக இந்த இரண்டு போன்களும் 2ஜிபி ரேமுடன் வருகின்றன. அதே நேரத்தில் நெக்சுஸ் போன் 8ஜிபி மற்றும் 16ஜிபி அளவுகளில் வருகிறது. அதே நேரத்தில் எஸ்3 போன் 16ஜிபி, மற்றும் 32ஜிபி ஆகிய அளவுகளில் வருகிறது. விரைவில் 64ஜிபி எஸ்3 போனும் வர இருக்கிறது.

இணைப்பு வசதிகளுக்காக இந்த இரண்டு போன்களும் வைபை, ப்ளூடூத், என்எப்சி மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போன்ற வசதிகளைக் கொண்டிருக்கின்றன. நெக்சுஸ் 15.3 மணி நேர இயங்கு நேரத்தையும் எஸ்3 போன் 11.5 மணி நேர இயங்கு நேரத்தையும் வழங்குகின்றன.

8ஜிபி நெக்சுஸ் போன் ஆன்லைனில் ரூ.23,490க்கும், 16ஜிபி நெக்சுஸ் போன் ரூ.27,490க்கும் விற்கப்படுகின்றன. அதே நேரத்தில் 8ஜிபி எஸ்3 போன் ரூ.34,800க்கும் மற்றும் 16ஜிபி எஸ்3 போன் ரூ.41,500க்கும் விற்கப்படுகின்றன.

விலையைப் பொருத்துப் பார்த்தால் நெக்சுஸ் 4ஐ பலர் விரும்புவர். ஆனால் தொழில் நுட்ப வசதிகளை வைத்துப் பார்த்தால் எஸ்3 போன் பக்கம் வாடிக்கையாளர்கல் சாய்வார்கள்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X