விண்டோஸ் போனுடன் போட்டியிடும் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்!

|

விண்டோஸ் போனுடன் போட்டியிடும் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன்!

எல்ஜி நிறுவனத்தின் நெக்சஸ்-4 மற்றும் எச்டிசி 8-எக்ஸ் என்ற இந்த 2 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு நமது தமிழ் கிஸ்பாட் பக்கத்தில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. இதை இன்னும் வேறு விதமாகவும் சொல்லலாம். விண்டோஸ்-8 மற்றும் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும் ஸ்மார்ட்போனிற்கும் இடையில் இருக்கும் ஒப்பீடு என்றும் சொல்லலாம்.

திரை:

நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 4.7 இஞ்ச் திரை வசதியினை கொண்டதாக இருக்கும். இந்த ஸ்மார்ட்போன் கையாள்வதற்கு ஏற்ற வகையில் 139 கிராம் எடையினை கொண்டதாக இருக்கும். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 130 கிராம் எடையில், 4.3 இஞ்ச் திரை வசதியினை சிறப்பாக கொடுக்கும். இதனால் நெக்சஸ்-4 ஸ்மார்ட்போனில் 1280 X 768 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போனில் 1280 X 720 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் பெறலாம்.

பிராசஸர் விவரம்:

நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 1.5 ஜிகாஹெர்ட்ஸ் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 ப்ரோ பிராசஸரினையும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் டியூவல் கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் எஸ்-4 பிராசஸரினையும் வழங்கும்.

ப்ளாட்ஃபார்ம்:

இந்த ஸ்மார்ட்போன்களின் இயங்குதளம் பற்றிய விவரம் மிக முக்கியமான ஒன்றாக இருக்கும். நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும். எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் விண்டோஸ்-8 இயங்குதளத்தினை கொண்டதாக இருக்கும்.

இயங்குதளத்தின் வசதிகள்:

நெட்வொர்க் இன்டகிரேஷன், ஸ்கைட்ரைவ், ஃபேஸ்புக் இவன்ட்ஸ், விஷுவல் வாய்ஸ்மெயில் போன்ற வசதிகளையெல்லாம் இந்த விண்டோஸ்-8 இயங்குதளத்தின் மூலம் பெறலாம். ஜெஸ்சர் டைப்பிங், மிராகாஸ்ட், டேட்ரீம், மேம்படுத்தப்பட்ட நோட்டிஃபிக்கேஷன், க்விக் செட்டிங்ஸ் போன்ற வசதிகளை ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மூலம் பெறாலம்.

மெமரி வசதி:

நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 8 ஜிபி மற்றும் 16 ஜிபி மெமரி வசதியினை வழங்குவதாகவும், எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 16 ஜிபி மெமரி வசதியினை கொடுப்பதாகவும் இருக்கிறது.

பேட்டரி ஆற்றல்:

நெக்சஸ்-4 மற்றும் எச்டிசி 8-எக்ஸ் ஆகிய ஸ்மார்ட்போன்கள் வைபை, ப்ளூடூத், என்எப்சி ஆகிய தொழில் நுட்ப வசதிக்கு சிறப்பாக சப்போர்ட் செய்யும். நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் 2,100 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியின் மூலம் 15.3 டாக் டைம் மற்றும் 390 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும வழங்கும். 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் 1,800 எம்ஏஎச் லித்தியம் பாலிமர் பேட்டரியினை கொண்டு சிறப்பான ஆற்றலை கொடுக்கும்.

விலை:

எச்டிசி 8-எக்ஸ் ஸ்மார்ட்போன் ரூ. 35,023 விலையினையும், நெக்சஸ்-4 ஸ்மார்ட்போன் (8 ஜிபி மற்றும் 16 ஜிபி) ரூ. 23,490 விலையினையும் மற்றும் ரூ. 27,490 விலையினையும் கொண்டதாக இருக்கும்.

இந்த ஸ்மார்ட்போனை ஆங்கிலத்தில் படிக்க

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X