எல்ஜி நெக்சஸ் 4 ஸ்மார்ட்போனின் கேமராவில் பர்ப்பிள் ஹேஸ் பிரச்சினை

சமீபத்தில் கூகுள் களமிறக்கிய எல்ஜி நெக்சுஸ் 4 ஸ்மார்ட்போன் விற்பனையில் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த போனை எல்ஜி நிறுவனம் உற்பத்தி செய்தது. அதே நேரத்தில் இந்த நெக்சஸ் போன் மற்றும் ஐபோன் ஆகிய இரண்டும் ஒரே கேமராவைக் கொண்டிருக்கின்றன.
அதனால் ஐபோன் 5 கேமராவின் பர்ப்புள் ஹேஸ் பிரச்சினையை இந்த நெக்சுஸ் 4 ஸ்மார்ட்போனும் சந்தித்து வருதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நெக்சுஸ் 4 போனில் உள்ள கேமராவில் எடுக்கப்பட்ட போட்டோக்களை ஒரு சிலர் கூகுள்+ல் பதிவேற்றம் செய்திருக்கின்றனர். அந்த போட்டோக்களில் எல்லாம் பர்ப்பிள் நிறம் பரவி இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக விளக்குகளை போட்டோ எடுக்கும் போது இந்த பிரச்சினை இருப்பதாக தெரிகிறது.
கடந்த மாதம் களமிறங்கிய ஐபோன் 5ல் இருக்கும் கேமராவிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பலர் தெரிவித்திருந்தனர். ஆனால் இதை முதலில் ஐபோன் 5 மறுத்திருந்தது. ஆனால் நாளடைவில் இந்த பிரச்சினையை ஆப்பிள் ஏற்றுக் கொண்டது.
தற்போது நெக்சுஸ் 4 போனிலும் இந்த பிரச்சினை இருப்பதாக பலரும் தெரிவிக்கின்றனர். ஆனால் இதற்கு கூகுள் மற்றும் எல்ஜி நிறுவனங்கள் மௌனம் காத்து வருகின்றன.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470


Click it and Unblock the Notifications