நவம்பர் 30ல் இந்தியாவிற்கு வரும் நெக்சுஸ் 4 ஸ்மார்ட்போன்

கூகுள் நிறுவனம் எல்ஜி நிறுவனத்தோடு இணைந்து தனது புதிய நெக்சுஸ் 4 என்ற ஸ்மார்ட்போனைக் களமிறக்கியது. இந்த போன் விற்பனைக்கு வந்த சிலமணி நேரங்களிலே விற்றுத் தீர்ந்து சாதனை படைத்தது. இந்த போன் மிக விரைவில் இந்தியாவிற்கு வர இருக்கிறது.
அதாவது நவம்பர் 30 அன்று இந்தியாவிற்கு இந்த போன் விற்பனைக்கு வர இருப்பதாக இந்தியாவில் மொபைல் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடும் ஒரு முக்கிய நிறுவனம் தெரிவித்திருக்கிறது. ஆனால் இதைப் பற்றிய அதிகார்ப்பூர்வமான அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை.
மேலும் இந்த நெக்சுஸ் போனை எல்ஜி நிறுவனம் இந்தியாவில் களமிறக்க இருக்கிறது. இந்த போன் இந்தியிவில் ரூ.30,000க்கு விற்கப்படும் என்று தெரிகிறது. இந்த போன் சூப்பரான தொழில் நுட்ப வசதிகளுடன் வருகிறது.
குறிப்பாக இந்த போனில் குவல்காம் சினாப்ட்ராகன் எ4 ப்ரோ குவாட் கோர் ப்ராசஸர் இருப்பதால் இந்த போன் மிக வேகமாக இயங்கும் என்று உறுதியாக நம்பலாம். அதோடு இந்த போனில் 4.7 இன்ச் ஐபிஎஸ் எச்டி டிஸ்ப்ளே, 2ஜிபி ரேம், 8எம்பி பின்பக்க கேமரா, 1.3எம்பி முகப்பு கேமரா போன்ற வசதிகளையும் அனுபவிக்க முடியும்.
இந்த போனின் முக்கிய சிறப்பு என்னவென்றால் இது ஆன்ட்ராய்டு ஜெல்லி பீன் 4.2 இயங்கு தளத்தில் வருகிறது. அதனால் இந்த போன் கண்டிப்பாக விற்பனையில் சாதனை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications