மேஜிக் காட்ட வரும் எல்ஜி மிராக்கில் ஸ்மார்ட்போன்!

மிராக்கில் என்ற புதிய ஸ்மார்ட்போனை உருவாக்கி உள்ளது. இது மைக்ரோசாஃப்டு விண்டோ இயங்குதளத்தில் இயங்கும். டபிள்யூவிஜிஏ நோவா தொழில் நுட்பம் கொண்ட திரை வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொடுக்கும். இதில் ஸ்னாப்டிராகன் சிப்செட் மற்றும் ஸ்கார்பியன் பிராசஸர் தொழில் நுட்பமும் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.
இதில் உள்ள 5 மெகா பிக்ஸல் கேமரா வசதி சிறந்த துல்லியம் கொண்ட புகைப்படத்திற்கு சப்போர்ட் செய்யும். இதில் விஜிஏ முகப்பு கேமராவும் உள்ளது. என்எஃப்சி தொழில் நுட்பத்திற்கு துணை புரியும் இந்த ஸ்மார்ட்போன் வைபை, 3.0 புளூடூத் போன்ற வசதியையும் வழங்கும்.
இந்த மிராக்கில் ஸ்மார்ட்போனின் தொழில் நுட்பம் பற்றி அதிகமான தகவல்களோ, இதன் விலை விவரமுமோ, வெளியாகும் தேதியோ வெளியாகவில்லை.
இந்த தகவல்களை இன்னும் கொஞ்சம் காத்திருந்து பெற வேண்டி இருக்கிறது. இந்த மிராக்கில் ஸ்மார்ட்போன் பார்சிலோனாவில் நடக்கவிருக்கும் மொபைல் வேர்ல்டு காங்ரஸில் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications