Home
Mobile

புதிய ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி

By Super
புதிய ஆன்ட்ராய்டு போனை அறிமுகப்படுத்துகிறது எல்ஜி
மார்க் எல்எஸ்-855 என்ற புதிய மாடலை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இந்த புதிய ஸ்மார்ட்போன் எல்ஜி ஆப்டிமஸ் பிளாக்கின் மேம்படுத்தப்பட்ட மாடலே என்று கருதப்படுகிறது.

4 இஞ்ச் டிஎஃடி மல்டி டச் ஸ்கிரீன் வசதி கொண்டுள்ளது. இதில் 480 X 800 பிக்ஸல் 16 எம் களர்ஸ் வழங்கப்பட்டுள்ளது. பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், லைட் சென்சார் போன்ற வசதியும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 1500 எம்ஏஎச் எல்ஐ-இயான் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் சற்று குறைவான டாக் டைமையே கொடுக்கின்றது. இதில் 5.5 மணி நேரம் டாக் டைம் வழங்குகிறது. மார்க் எம்எஸ்855 மொபைலில் கூகில் ஆன்ட்ராய்டு வி2.3.4 ஜின்ஜர்பிரீட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் 5 மெகா பிக்ஸல் கேமரா மற்றும் 2 மெகா பிக்ஸல் ரியர் கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் தெளிவான புகைப்படங்களைப் பெற முடியும். சிறப்பான புகைப்படத்தைப் பெறுவதற்காக இதில் லெட் ஃப்லாஷ் மற்றும் ஆட்டோ ஃபோக்கஸ் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த மாடலில் மைக்ரோ எல்டி,மைக்ரோ எஸ்டிஎச்சி, டிரான்ஸ் ஃப்ளாஷ் கார்ட்ஸ் போன்ற வசதிகள் உள்ளன. தகவல்களைப் பரிமாற்றம் செய்து கொள்ளவும், கணினியில் உள்ள விஷயங்களைப் பதிவேற்றம் செய்யவும், ஏ2டிபி புளூடூத் மற்றும் யூஎஸ்பி வசதி இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக், டிவிட்டர், மைஸ்பேஸ்,பிக்காசா அப்ளிக்கேஷன், யூடியூப் அப்லோடர் போன்றவற்றின் பயன்பாடுகள் இதில் அதிகம் என்று கூறலாம். எல்ஜி மார்க் எல்எஸ்-855 மொபைலின் விலை ரூ.9,000 இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X