Home
Mobile

எல்ஜி மற்றும் சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீடு!

By Super

எல்ஜி மற்றும் சாம்சங் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்கள்: ஓர் ஒப்பீடு!
2011 ஆண்டு ஸ்மார்ட்போன்களுக்கான ஆண்டு என்று கூறலாம். கடந்த ஆண்டில் நிறைய ஸ்மார்ட்போன்கள் புதிய தொழில் நுட்பங்களை கொடுத்து சாதனை படைத்தன. புதிய தொழில் நுட்பங்கள் கொடுத்ததில் எல்ஜி, சாம்சங் நிறுவனங்களும் சேரும். எல்ஜி மார்க் எல்எஸ்-855, சாம்சங் டிரான்ஸ்ஃபார்ம் எம்-930 அல்ட்ரா என்ற பெயரில் கடந்த

ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது.

எல்ஜி மார்க் எல்ஸ்-855 ஸ்மார்ட்போன் ஐபிஎஸ் எல்சிடி திரை தொழில் நுட்பத்தினை, இதன் 4.0 இஞ்ச் திரையின் மூலம் கொடுக்கும். டிரான்ஸ்ஃபார்ம் ஸ்மார்ட்போன் 3.5 இஞ்ச் டிஎப்டி மல்டி டச் திரை வசதியையும், கியூவர்டி கீப்பேட் வசதியையும் கொண்டது. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஸ்மார்ட்டான திரையின் மூலம் தகவல்களை மிக தெளிவாக வழங்கும்.

இது போன்ற ஸ்மார்ட்போன்கள் இருக்கையில், சிறப்பான காட்சிகளை புகைப்படமாக்க வேறு கேமராவை தேட வேண்டிய அவசியமே இல்லை.

முதலில் கூறிய எல்ஜி மார்க் ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் கேமராவும், 2 மெகா பிக்சல் முகப்பு கேமராவும் உள்ளது. சாம்சங் டிரான்ஸ்ஃபார்ம் ஸ்மார்ட்போனும் 3.15 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. இதனால் சிறப்பான புகைப்படம், வீடியோ பதிவுகள் போன்றவற்றை பெறலாம். இதில் உள்ள 2ஜிபி இன்டர்னல் மெமரியை, 32ஜிபி வரை வேண்டுமானாலும் விரிவுபடுத்தி கொள்ளலாம்.

ஆடியோ மற்றும் வீடியோ வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன்கள், 3ஜி நெட்வொர்க் வசதிக்கும் எளிதாக சப்போர்ட் செய்யும்.

எல்ஜி மார்க் ஸ்மார்ட்போனில் ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் 6 மணி நேரம் 30 நிமிடம் டாக் டைமை பெறலாம். சாம்சங் டிரான்ஸ்ஃபார்ம் ஸ்மார்ட்போனில் உள்ள ஸ்டான்டர்டு எல்ஐ-அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரி, 7 மணி நேரம் வரை டாக் டைம் வசதியினை கொடுக்கிறது.

எந்த ஸ்மார்ட்போனையும் ஸ்மார்ட்டாக காட்டுவது அதன் ஓஎஸ் தொழில் நுட்பம் தான். இந்த இரண்டு ஸ்மார்ட்போனிலும் அப்படிப்பட்ட ஆன்ட்ராய்டு வி2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் உள்ளது. இந்த ஓஎஸ் எளிதாக இயங்க எல்ஜி மார்க் ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் பிராசஸரும், சாம்சங் டிரான்ஸ்ஃபார்ம் ஸ்மார்ட்போனில் 1 ஜிகாஹெர்ட்ஸ் ஸ்கார்பியன் பிராசஸரும் பொருத்தப்பட்டுள்ளது.

பேட்டரி, தொழில் நுட்பம், சிறந்த வடிவமைப்பு என்று எந்த வகையில் பார்த்தாலும் இந்த 2 ஸ்மார்ட்போன்களும் சிறந்ததாக இருக்கும் என்று தோன்றுகிறது. எல்ஜி மார்க் எல்எஸ்-855, சாம்சங் டிரான்ஸ்ஃபார்ம் எம்-930 அல்ட்ரா என்ற இந்த ஸ்மார்ட்போன்களின் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.

அடுத்த மாதம் இந்த ஸ்மார்ட்போன்கள் வெளியாக உள்ளது. அப்போது இந்த ஸ்மார்ட்போன்கள் வாடிக்கையாளர்களிடம் சிறந்த வரவேற்பை பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X