Home
Mobile

அப்கிரேட் வசதியுடன் புதிய எல்ஜி லுசிட் 4ஜி ஸ்மார்ட்போன்!

By Super

அப்கிரேட் வசதியுடன் புதிய எல்ஜி லுசிட் 4ஜி ஸ்மார்ட்போன்!
புதிய தனது படைப்பின் தொழில் நுட்ப விவரங்களை வெளியிட்டுள்ளது எல்ஜி நிறுவனம். எல்ஜி லுசிட் 4ஜி ஸ்மார்ட்போன் 4 இஞ்ச் என்ஓவிஏ தொழில் நுட்பத்தினை கொண்ட பிரம்மாண்டமான திரையை வழங்கும். இதனால் முழு விவரங்களையும் தெளிவாக பார்க்கலாம். 137 கிராம் எடை கொண்ட இந்த ஸ்மார்ட்போன் மல்டி தொடுதிரை வசதியை கொண்டுள்ளது. கூகுள் ஆன்ட்ராய்டு 2.3.6 இயங்குதளத்தை இந்த ஸ்மார்ட்போன் கொண்டிருக்கிறது. 1,200 டியூவல் கோர் பிராசஸர் இதில் உள்ளதால் இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் அதி வேகத்தில் இயங்கும்.

இந்த எல்ஜி லுசிட் 4ஜி ஸ்மார்ட்போனில் 5 மெகா பிக்ஸல் மற்றும் 0.3 மெகா பிக்ஸல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது என்பது வாடிக்கையாளர்களுக்கு பெரிய குஷியை ஏற்படுத்தும் விஷயம்.

ஆடியோ மற்றும் வீடியோ ப்ளேயர் வசதிக்கும் இந்த ஸ்மார்ட்போன் அற்புதமாக சப்போர்ட் செய்யும். அதோடு 1,540 எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளதால் இதில் உள்ள மல்டி மீடியா வசதியினை அதிக நேரம் பயன்படுத்தினாலும் நீடித்து உழைக்கும் தன்மை கொண்டது.

இந்த ஸ்மார்ட்போனை பொருத்த வரை இன்னும் ஒரு பெரிய சவுகரியம் என்னவென்றால், இதில் ஆன்ட்ராய்டு 4.0 ஆப்பரேட்டிங் சிஸ்டம் அப்கிரேட் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. இந்த ஸ்மார்ட்போன் கவர்ச்சிகரமான விலையோடு கூடியா விரைவில் விற்பனைக்கு வரும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X