Home
Mobile

ஆற்றல் வாய்ந்த 2 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!

By Super

ஆற்றல் வாய்ந்த 2 ஸ்மார்ட்போன்களின் ஒப்பீடு!
சூப்பர் தொழில் நுட்பம் கொண்ட இரண்டு ஸ்மார்ட்போன்கள் பற்றி இங்கே ஓர் சிறிய ஒப்பீட்டை பார்க்கலாம். நம்பர் ஒன் நிறுவனமாக இருப்பினும் ஸ்மார்ட்போன் வாங்கும் போது எதை வாங்குவது என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவே இந்த ஸ்மார்ட்போன் ஒப்பீடு.

எல்ஜி மற்றும் எச்டிசி என்ற இரண்டு நிறுவனங்களுமே வாடிக்கையாளர்கள் மத்தில் உயர்ந்த மதிப்பினை பெற்றள்ளது. இதில் எல்ஜி லுசிட் 4ஜி மற்றும் எச்டிசி டிராய்டு இன்கிரெடிபில் ஆகிய 2 ஸ்மார்ட்போன்களுமே சிறப்பான பெயர் பெற்ற நிறுவனங்கள் தான்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே 4.0 இஞ்ச் திரை வசதியை கொண்டுள்ளது. ஆனால் இதன் திரை துல்லியம் சற்று வித்தியாசப்படுகிறது. எச்டிசி டிராய்டு இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் 540 X 960 பிக்ஸல் திரை துல்லியத்தினையும், எல்ஜி லுசிட் 480 X 800 பிக்ஸல் திரை துல்லியத்தினையும் கொண்டது.

எல்ஜி லுசிட் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 2.3 ஜின்ஜர்பிரெட் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை வழங்கும். இன்னும் கொஞ்சம் கூடுதலான தொழில் நுட்பமான ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை எச்டிசி டிராய்டு இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் கொடுக்கும்.

எச்டிசி டிராய்டு இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் 1,200 மெகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் டியூவல் கோர் ஸ்னாப்டிராகன் பிராசஸரை வழங்குவதால், இதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் சிறப்பாக இயங்கும்.

எல்ஜி லுசிட் ஆப்பரேட்டிங் சிஸ்டம் 1.2 ஜிகாஹெர்ட்ஸ் பிராசஸரை கொண்டுள்ளது. இதனால் சிறந்த செயல்பாட்டினை டிராய்டு இன்கிரெடிபில் ஸ்மார்ட்போனிலும் எதிர்பார்க்கலாம்.

எச்டிசி டிராய்டு இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்ஸல் கேமராவினையும், எல்ஜி லுசிட் ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினையும் கொடுக்கும். இதனால் புகைப்படம் மற்றும் வீடியோ ரெக்கார்டிங் வசதிகளை எச்டிசி டிராய்டு இன்கிரெடிபில் ஸ்மார்ட்போன் சிறப்பாக கொடுக்கும்.

இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களிலுமே எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ் வசதியினை 32 ஜிபி வரை விரிவுபடுத்தி கொள்ளலாம். சில தொழில் நுட்பங்கள் இந்த 2 ஸ்மார்ட்போன்களிலுமே ஒத்து போகிறது. 3ஜி மற்றும் 4ஜி நெட்வொர்க் வசதியினை எளிதாக இந்த ஸ்மார்ட்போன்களில் பெறலாம். பேட்டரியும் அதே போல தான்.

1,700 எம்ஏஎச் பேட்டரியினை கொண்ட இந்த ஸ்மார்ட்போன்களில் உயர்ந்த தொழில் நுட்பத்தினை பெற சரியாக ஒத்துழைக்கும். இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் விலையும் இன்னும் சரிவர அறிவிக்கப்படவில்லை.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X