5கேமராக்களுடன் அசத்தலான எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இக்கருவியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது.
எல்ஜி நிறுவனம் தொடர்ந்து அதிநவீன சாதனங்களை அறிமுகம் செய்ய அதிக ஆர்வம் காட்டி வருகிறது என்று தான் கூறவேண்டும், அதன்படி மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் மாடலை நேற்று மாலை அமெரிக்காவில்
அறிமுகம் செய்துள்ளது அந்நிறுவனம்.
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் மூன்று கேமராக்களும், முன்புறம் இரண்டு கேமராக்களும் பொறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு விரைவில் இந்திய சந்தiயில் எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் அம்சங்களைப் பார்ப்போம்.

டிஸ்பிளே:
எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 6.4-இன்ச் க்யுஎச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது,
அதன்பின்பு 3120 x 1440 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. மேலும் ஐபி68 நீர் மற்றும் தூசி எதிர்ப்பு தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளத என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்னாப்டிராகன் 845:
இக்கருவியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

சேமிப்பு:
எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடமபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கேமரா:
இந்த ஸ்மார்ட்போனின் கேமராவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது, அதன்படி பின்புறம் 13எம்பி நிலையான ஃபோகல் லென்த் f1.5 மற்றும் 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் ஃபோகல் லென்த் f2.4. மற்றும் 16எம்பி
வைட்-ஆங்கிள் லென்ஸ் போகல் லென்த் f1.9 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனின் முன்புறம் 8எம்பி+5எம்பி கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆடியோ:
இந்த எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனில் 32-பிட் Hi-Fi குவாட் DACஆடியோ அம்சம் இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்த மிகவும் அருமையாக இருக்கும். கருப்பு, சாம்பல், நீலம், சிவப்பு போன்ற நிறங்களில் இந்த ஸ்மார்ட்போன் கிடைக்கும்

விலை:
இந்த ஸ்மார்ட்போனில் 3300எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போனின் இந்திய விலை ரூ.66,460-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications