மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.
மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் மாடலை தற்சமயம் அறிமுகம் செய்துள்ளது எல்ஜி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் ஆசிய சந்தைகளுக்கு விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் விலை சற்று உயர்வாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, அதன்பின்பு செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது என எல்ஜி நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி வி35 தின்க் :
எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின் 2880 x 1440 பிக்சல்
திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5பாதுகாப்புடன்
இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

ஆண்ட்ராய்டு ஓரியோ:
எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி வி35 தின்க் சாதனம்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த சில அம்சங்கள் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் டூயல் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா
8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் டூயல் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3000எம்ஏஎச்:
எல்ஜி வி35 தின்க் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த
ஸ்மார்ட்போனின் விலை ரூ.60,000/-வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications