விரைவில் வரும் எல்ஜியின் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்

இது 10.5 மிமீ தடிமன் கொண்டது. 123 கிராம் எடை கொண்டுள்ளது. இதனால் இந்த மாடலை எளிதாகக் கையில் வைத்திருக்க முடியும். இதன் 4.5 எல்சிடி கெப்பாசிட்டி வசதி கொண்ட திரை 16 எம் களர்ஸுக்கு சப்போர்ட் செய்கிறது. இது 720 x 1280 பிக்ஸல் கொண்டது. எல்யூ-6200 மொபைலில் ஆட்டோ டர்ன் ஆஃப், ஆக்ஸிலரோ மீட்டர், பிராக்ஸிமிட்டி சென்ஸார், கிரையோ சென்சார் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது.
இது மல்டி டச் வசதி கொண்ட மொபைல் மாடலாகும். 1 ஜிபி ரேம் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. மைக்ரோஎஸ்டி கார்டு மூலம் இதன் மெமரி வசதியை 32 ஜிபி வரை விரிவுபடுத்திக் கொள்ளலாம். இது ஜிபிஆர்எஸ் மற்றும் எட்ஜ் தொழில் நுட்பத்தையும் கொண்டுள்ளது. இன்னொரு இன்பகரமான விஷயம் என்னவென்றால் இந்த மொபைல் 3 ஜி வசதிக்கு சப்போர்ட் செய்கிறது.
இதில் வைபை வசதி லோடட் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நெட் வசதியினைப் பெற முடியும். இதில் புதிதாக 3.0 புளூடூத் வெர்ஷன் பயன்படுத்தப்பட்டுள்ளது. மைக்ரோ யூஎஸ்பி 2.0 வசதியும் இதில் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரியர் மற்றும் முகப்புக் கேமராவாகிய இரண்டு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
ரியர் கேமரா 8 எம்ப்பி வசதி கொண்டது. இதனால் தெளிவான புகைப்படத்தைப் பெற முடியும். அதோடு 1.3 எம்ப்பி முகப்புக் கேமரா கொண்டுள்ளது. இதன் மூலம் வீடியோ சாட் செய்ய முடியும்.
இதில் பவர்ஃபுல் ஸ்கார்பியன் டியூவல் கோர் பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது. இது 1.5 ஜிகாஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும். ஆன்டிரோ 220 ஜிபியு பவர் க்வால்காம் ஸ்னாப்டிராகன் ச்சிப்செட் பொருத்தப்பட்டுள்ளது. இதில் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து வசதிகளின் மூலமும் எந்த தகவல்களையும் எளிதாகப்பெற முடியும்.
வாடிக்கையாளர்களின் சவுகரியத்துக்காக எச்டிஎம்ஐ போர்ட், டிஜிட்டல் கம்பாஸ், டாக்யூமன்ட் வ்யூவர், மல்டி ஃப்பார்மெட் மீடியாப் ப்ளேயர், ஆடியோ/வீடியோ ஃபைல்ஸ் போன்ற வசதிகளும் இதல் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் விலை இன்னும் அறிவிக்கப்படவில்லை.


Click it and Unblock the Notifications