எல்ஜி எல்-5 ஸ்மார்ட்போன் சிறப்பு கண்ணோட்டம்!

Posted By: Staff
எல்ஜி எல்-5 ஸ்மார்ட்போன் சிறப்பு கண்ணோட்டம்!
பல புதிய ஸ்மார்ட்போன்களை எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த வகையில் எல்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ள எல்-5 என்ற ஸ்மார்ட்போனின் தொழில் நுட்ப விவரத்தினை பற்றி ஒரு சிறப்பு கண்ணோட்டம் பார்க்கலாம்.

இந்த எல்-5 ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு ஐஸ் கிரீம் சான்ட்விச் ஆப்பரேட்டிங் சிஸ்டம் கொண்டு இயங்கும். ஸ்மார்ட்போன்களின் செயல்பாட்டில் இதன் பிராசஸரும முக்கிய பங்கு வகிக்கிறது.

இந்த ஸ்மார்ட்போன் கியூவல்காம் எம்எஸ்எம்7225ஏ ஸ்னாப்டிராகன் பிராசஸரினை கொண்டுள்ளது. இதனால் சிறப்பான வேகத்தில் இந்த ஸ்மார்ட்போன் இயங்கும்.

மேலும் இதன் 4 இஞ்ச் அகன்ற திரை வசதி தகவல்களை சிறப்பாக கொடுக்கும். ஆனால் இதன் திரை துல்லியம் அதிகமாக இல்லாமல் சாதாரணமாக 320 X 480 பிக்ஸல் திரை துல்லியத்தினை தான் கொடுக்கிறது.

திரையின் அளவு மட்டும் முக்கியமல்ல. ஸ்மார்ட்போனின் திரை துல்லியம் மிக முக்கியம். துல்லியத்தினை பொருத்து தான் அந்த ஸ்மார்ட்போனின் திரை தெளிவும் கிடைக்கும். ஆனால் 4 இஞ்ச் திரைக்கு இந்த துல்லியம் சற்று குறைவாக தெரிகிறது.

அடுத்ததாக இதன் கேமரா துல்லியத்தினையும் பார்க்கலாம். இந்த எல்-5 ஸ்மார்ட்போன் 5 மெகா பிக்ஸல் கேமராவினை கொண்டுள்ளது. இந்த கேமராவில் 2560 X 1920 பிக்ஸல் கேமரா துல்லியத்தினையும் பெறலாம்.

இந்த துல்லியத்தினால் தெளிவான புகைப்படத்தினையும், சிறப்பான வீடியோ காட்சிகளையும் பார்க்க முடியும் என்பது இந்த ஸ்மார்ட்போனில் சாத்தியம் தான்.

ஜிபிஆர்எஸ், எட்ஜ் போன்ற வசதிகளுக்கு சப்போர்ட் செய்யும் இந்த ஸ்மார்ட்போன் முக்கியமாக என்எஃப்சி தொழில் நுட்பத்திற்கும் எளிதாக சப்போர்ட் செய்யும். இந்த தொழில் நுட்பம் பொதுவாக பணபரிவர்த்தனைகள் செய்ய பயன்படுகிறது.

கறுப்பு மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன், வடிவமைப்பில் மட்டும் கவர்ச்சிகரமானதாக இல்லாமல், தொழில் நுட்பத்திற்கு நீடித்து உழைக்கும் வகையில் சிறப்பான பேட்டரி வசதியினையும் கொடுக்கும் லித்தியம் அயான் 1,500 எம்ஏஎச் பேட்டரியும் இதில் பொருத்தப்பட்டுள்ளது.

இதனால் 2ஜி வசதிக்கு 900 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும், 3ஜி வசதிக்கு 900 மணி நேரம் ஸ்டான்-பை டைமினையும் பெறலாம்.

இது மட்டும் அல்லாமல் சிற்பபான டாக் டைமினையும் இந்த பேட்டரியின் மூலம் பெறலாம். 10 மணி நேரம் 2ஜி வசதிக்கும், 9 மணி நேரம் 20 நிமிடம் 3ஜி வசதிக்கும் டாக் டைம் அளிக்கும்.

இந்த எல்-5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மொபைல் மார்கெட்டில் எல்-5 ஸ்மார்ட்போனை ரூ. 13,199 விலையில் பெறலாம்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்