Just In
- 1 hr ago
Mi 11 மற்றும் Mi 11 Lite ஸ்மார்ட்போனின் இந்தியப் பதிப்பு பற்றிய முக்கிய தகவல்.. அறிமுகம் எப்போ?
- 3 hrs ago
4ஜிபி ரேம், 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் Micromax In Note1: ரூ.9,999 என்ற தள்ளுபடி விலையில்- குறுகிய காலத்திற்கு
- 3 hrs ago
தினமும் 3 ஜிபி டேட்டா மலிவு விலையில் வேண்டுமா? அப்போ, இதுதான் சரியான திட்டம்..
- 5 hrs ago
ஜனவரி 21 அமேசான் குவிஸ் பதில்கள்: Philips Induction Cooktop வெல்ல அரிய வாய்ப்பு?
Don't Miss
- Education
டிப்ளமோ முடித்தவர்களுக்கு ரூ.62 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா?
- News
கொரோனா உயிரிழப்பு.. இரண்டாம் உலகப் போரில் இழந்த வீரர்களைவிட அதிக மக்களை இழந்த அமெரிக்கா
- Movies
உன்னை காதலிக்கிறேன்.. 30வது திருமண நாளில் மனைவிக்காக உருகும் சுரேஷ் தாத்தா!
- Finance
ரயில் கட்டண விலையில் விமான பயணம்.. இண்டிகோவின் அட்டகாசமான சலுகை.. ரூ.877 சலுகை நீட்டிப்பு..!
- Sports
1 வாரமாக விடப்பட்ட தூது.. எதற்கும் அடிபணியாத நிர்வாகம்.. கடைசியில் தோல்வி அடைந்த தோனியின் முயற்சி
- Automobiles
அமெரிக்க அதிபரின் ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தை இயக்க எவ்வளவு செலவாகிறது தெரியுமா?
- Lifestyle
ஆப்பிளை இப்படி சாப்பிடுவது உங்க உயிருக்கே அப்பத்தை ஏற்படுத்துமாம் தெரியுமா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசத்தலான எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை (இந்திய மதிப்பில்) ரூ.26,780-ஆக உள்ளது. விரைவில் AT&T, Cricket Wireless and மற்றும் cellular நிறுவனங்கள் மூலம் இந்த எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போனை வாங்க முடியும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் punch-hole டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு
1080 x 2400 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 690 எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. பின்பு ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்
செய்யப்பட்டுள்ளது.
பப்ஜி மொபைல் கேம் முற்றிலும் தடை: இனி சுத்தமா இயங்காதா?

எல்ஜி கே92 5ஜி சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது. அதாவது நீங்கள் மெமரி கார்டை பயன்படுத்துவதற்கு ஒரு ஸ்லாட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சாதனம் டைட்டன் கிரே நிறத்தில் வெளிவந்துள்ளது.

எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 16எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் என பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குறிப்பாக எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி வசதியும், இதை சார்ஜ் செய்ய குவால்காம் Quick Charge 4.0 ஆதரவையும் கொண்டுள்ளது. மேலும் இந்த சாதனத்தின் ஆடியோ பகுதிக்கும் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.1, யூ.எஸ்.பி டைப் சி, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் 202 கிராம் உடன் எல்ஜி கே92 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190