பட்ஜெட் விலையில் அசத்தலான எல்ஜி கே9 அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு எல்ஜி கே8 ஸ்மார்ட்போன் மாடலை வெளியிட்டது எல்ஜி நிறுவனம், இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்சமயம் எல்ஜி கே8 (2018) என்ற பெயரில் எல்ஜி கே9 ஸ்மார்ட்போன் மாடலை ரஷ்யாவில் அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம். மேலும் பல்வேறு அம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். விரைவில் இந்த
ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எல்ஜி கே9 பொதுவாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் 152 கிராம் எடை மற்றும் பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எல்ஜி கே9 :
எல்ஜி கே9 ஸ்மார்ட்போன் பொதுவாக 5-இன்ச் எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 720ஒ1280பிக்சல் தீர்மானம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு 7.1.2
எல்ஜி கே9 ஸ்மார்ட்போனில் 1.3ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் எஸ்ஒசி செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி கே9 ஸ்மார்ட்போன்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

8எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 8எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை 802.11, ப்ளூடூத் வி4.2, 4ஜி எல்டிஇ, ஜிபிஎஸ், யுஎஸ்பி 2.0, என்எப்சி, டூயல்-சிம் போன்ற
இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.


விலை:
எல்ஜி கே9 ஸ்மார்ட்போனில் 2500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த எல்ஜி கே9 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.11,400-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications