Home
Mobile

32எம்பி செல்பீ கேமராவுடன் எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விபரங்கள்.!

எல்ஜி நிறுவனம் தனது புதிய எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது,குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் அனைத்து நாடுகளிலும் இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன்
மாடல் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் யு-நாட்ச் டிஸ்பிளே

எல்ஜி கே71 ஸ்மார்ட்போன் ஆனது 6.8-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் யு-நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 20.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த

எல்ஜி கே71 ஸ்மார்ட்போனில் மிகவும் எதிர்பார்த்த ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி35எஸ்ஒசி சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது,மேலும் IMG PowerVR GE8320 GPU மற்றும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி

இந்த எல்ஜி கே71 ஸ்மார்ட்போனில் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளது அந்நிறுவனம்.

 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி

எல்ஜி கே71 ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 5எம்பி செகன்டரி சென்சார் + 5எம்பி டெப்த் சென்சார் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்
உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

4000எம்ஏஎச் பேட்டரி

எல்ஜி கே71 ஸ்மார்ட்போனில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும்பாஸ்ட் சார்ஜிங் வசதியுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது. குறிப்பாக இரண்டு நிறங்களில் மட்டுமே இந்தசாதனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டைப் சி, ஜி.பி.எஸ் /

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, யூ.எஸ்.பி டைப் சி, ஜி.பி.எஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மி.மீ ஆடியோ ஜாக்உள்ளிட்ட பல்வேறுஇணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த சாதனம். ஆடியோவைப் பொறுத்தவரை இது டி.டி.எஸ்: எக்ஸ் 3 டி ஆதரவு மற்றும்
உள்ளமைக்கப்பட்ட ஸ்டைலஸுடன் இரட்டை ஸ்பீக்கர் அமைப்பைக் கொண்டுள்ளதுஎல்ஜி கே71 ஸ்மார்ட்போன். இந்த
சாதனத்தின் விலைப் பற்றி தகவல் இல்லை,கிடைத்ததும் உடனே அப்டேட் செய்கிறோம்.

Best Mobiles in India

English summary
LG K71 Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X