LG K61, LG K51S, LG K41S Launched: எல்ஜி நிறுவனத்தின் தரமான மூன்று ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கே61, எல்ஜி கே51எஸ், எல்ஜி கே41எஸ், என்ற மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல்கள் குவாட்கேமரா அமைப்பு, 4000எம்ஏஎச் பேட்டரி மற்றும் பல்வேறு சிறப்பு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன்களின் பின்புறம் கைரேகை ஸ்கேனர் ஆதரவு உள்ள. பின்பு MIL-STD 810G உடன் இணக்கமான சேவைகளுடன் புதிய எல்ஜி ஸ்மார்ட்போன்கள் வெளிவந்துள்ளது.

எல்ஜி கே61 தான் ப்ரீமியமான மாடல்
இப்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எல்ஜி ஸ்மார்ட்போன்களில் எல்ஜி கே61 தான் ப்ரீமியமான மாடல் ஆகும், அதன்படி இந்த சாதனத்தின் பின்புறம் 48எம்பி பிரைமரி கேமரா, 16எம்பி செல்பீ கேமரா என பல்வேறு ஆதரவுகளுடன் இந்த சாதனம் வெளிவந்துள்ளது.

முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்
இருந்தபோதிலும் இப்போது அறிமுகம் செய்யப்பட்ட எல்ஜி கே 61, எல்ஜி கே 51 எஸ் மற்றும் எல்ஜி கே 41 எஸ் போன்றசாதனங்களின் விலைகள் வெளியிடப்படவில்லை. ஆனால் இந்த சாதனங்களின் விற்பனை விரைவில் துவங்கும் எனத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த புதிய எல்ஜி சாதனங்கள் முதலில் அமெரிக்காவில் விற்பனைக்கு வரும்,பின்பு பல்வேறு சந்தைகளில் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எல்ஜி கே 61, எல்ஜி கே51எஸ் மற்றும் எல்ஜிகே41 எஸ் சாதனங்களின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி கே61 அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளே (19.5: 9 விகிதம் )
சிப்செட்: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ப்ராசஸர்
ரேம்: 4ஜிபி
மெமரி 64ஜிபி/12ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உண்டு
ரியர் கேமரா: 48எம்பி பிரைமரி சென்சார்+ 8எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 5எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 16எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
எல்டிஇ, என்எப்சி, ப்ளூடூத் வி5,
கூகுள் லென்ஸ், டூயல்-பேண்ட் வைஃபை,
கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்
பின்புற கைரேகை சென்சார்

எல்ஜி கே51எஸ் அம்சங்கள்
டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (20:9 விகிதம்)
சிப்செட்: 2.3ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ப்ராசஸர்
ரேம்:3ஜிபி
மெமரி: 64ஜிபி
ரியர் கேமரா: 32எம்பி பிரைமரி லென்ஸ் + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 13எம்பி
பேட்டரி: 4000எம்ஏஎச்
எல்டிஇ,என்எப்சி, ப்ளூடூத் வி5,
கூகுள் லென்ஸ்,வைஃபை,
கூகுள் அசிஸ்டென்ட் பட்டன்
பின்புற கைரேகை சென்சார்

எல்ஜி கே41எஸ்
டிஸ்பிளே: 6.5-இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே (20:9திரை விகிதம்)
சிப்செட்: 2.0ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் ப்ராசஸர்
ரேம்: 3ஜிபி
மெமரி: 32ஜிபி
கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
ரியர் கேமரா: 13எம்பி பிரைமரி கேமரா + 5எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார்
செல்பீ கேமரா: 8எம்பி
பேட்டரி:4000எம்ஏஎச்


Click it and Unblock the Notifications