4 ஜிபி ரேம், 4000 எம்ஏஎச் பேட்டரியோடு எல்ஜி கே62, எல்ஜி கே52 ஸ்மார்ட்போன்கள்!
எல்ஜி கே 62 மற்றும் எல்ஜி கே 52 ஸ்மார்ட்போன்கள் குவாட் ரியர் கேமரா அமைப்பு 4,000 எம்ஏஎச் பேட்டரியோடு அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களும் கே தொடரின் மாடலாக வருகிறது.

எல்ஜி கே 62 மற்றும் எல்ஜி கே 52
எல்ஜி நிறுவனம் எல்ஜி கே 62 மற்றும் எல்ஜி கே 52 என்ற பெயரில் இரண்டு ஸ்மார்ட்போன்களை கே தொடரில் அறிமுகப்படுத்தியுள்ளது. சமீபத்திய நாட்களில் எல்ஜி நிறுவனம் எல்ஜி கே71 ஸ்மார்ட்போனை அறிவித்தது. எல்ஜி ஸ்மார்ட்போன் விலை விவரங்கள் குறித்து தெரியவில்லை.

அக்டோபர் முதல் ஐரோப்பாவில் விற்பனை
எல்ஜி நிறுவனம் அறிமுகப்படுத்திய இரண்டு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் முதல் ஐரோப்பாவில் விற்பனைக்கு வரும். அதைத் தொடர்ந்து ஆசியா, லத்தீன் அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய சந்தைகள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்படுகிறது.

6.6 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே
எல்ஜி கே 62 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச் முழு எச்டி + டிஸ்ப்ளே 20: 9 விகிதத்துடன் வருகிறது. ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 எஸ்ஓசி சிப்செட் மூலம் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனானது 4 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள் சேமிப்புடன் வருகிறது. 2 டிபி வரை மெமரி விரிவாக்கும் வகையில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஸ்லாட் வசதி இதில் உள்ளது.

48 மெகாபிக்சல் முதன்மை சென்சார்
எல்ஜி கே 62 ஸ்மார்ட்போனில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 5 மெகாபிக்சல் செகண்டரி சென்சா, 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் ஆழ சென்சார் கொண்ட குவாட் கேமரா அமைப்பு இருக்கிறது. 28 மெகாபிக்சல் செல்பி கேமா வசதி இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி கே 62 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட்இ, ப்ளூடூத் 5.0, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வசதியும் இதில் உள்ளது.

எல்ஜி கே 52 அம்சங்கள்
எல்ஜி கே 52 ஸ்மார்ட்போன் 6.6 இன்ச்
20:9 ஹெச்டி+ ஃபுல்விஷன் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ பி 35 சிப்செட்டுடன் இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம், 64 ஜிபி ஸ்டோரேஜ் அம்சத்தோடு வருகிறது. மேலும் இதில் 2 டிபி வரையிலான மெமரி விரிவாக்கக்கூடிய ஸ்லாட் இதில் உள்ளது.

4000 எம்ஏஎச் பேட்டரி
எல்ஜி கே 52 4000 எம்ஏஎச் பேட்டரி அம்சமும் ஆண்ட்ராய்டு 10 ஆதரவு உள்ளிட்டவைகளை இது கொண்டுள்ளது. ஸ்மார்ட்போனில் 48 எம்பி பின்புற கேமரா, 5 எம்பி அல்ட்ரா-வைட் சென்சார், 2 எம்பி மேக்ரோ சென்சார், 2 எம்பி ஆழ சென்சார் கொண்ட குவாட் ரியர் கேமரா உள்ளது. இது 13MP முன்புற செல்பி கேமராவை கொண்டுள்ளது.

கூகிள் அசிஸ்டென்ட் பட்டன்
எல்ஜி கே 62 ஸ்மார்ட்போனை போலவே எல்ஜி கே 52 ஸ்மார்ட்போனில் கைரேகை சென்சார் மற்றும் கூகிள் அசிஸ்டென்ட் பட்டனுடன் வருகிறது. 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் அம்சம் இதில் உள்ளது.


Click it and Unblock the Notifications