இந்த ஒரு எல்ஜி ஸ்மார்ட்போனை நம்பி வாங்கலாம்: விலை இவ்வளவு தான்.! அப்படியென்ன ஸ்பெஷல்.!

|

எல்ஜி நிறுவனம் புதிய எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. குவாட் ரியர் கேமராக்கள், சிறந்த மென்பொருள் வசதி மற்றும் இராணுவ தர MIL-STD-810G சான்றளிக்கப்பட்ட கட்டமைப்போடு வருகிறது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

ஒன்பது வெவ்வேறு வகைகளை

குறிப்பாக இந்த சாதனம் உயர் மற்றும் குறைந்த வெப்பநிலை, அதிர்வு, அதிர்ச்சி மற்றும் ஈரப்பதம் உள்ளிட்ட அமெரிக்க இராணுவ பாதுகாப்பு தர சோதனைகளின் ஒன்பது வெவ்வேறு வகைகளை கடந்ததாக் கூறப்படுகிறது.

ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-

எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது 6.6-இன்ச் எச்டி பிளஸ் Notch டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 720 x 1520 பிக்சல் தீர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. குறிப்பாக எல்ஜி நிறுவனம் இரண்டு வருட நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்துடன் ஒன் டைம் இலவச ஸ்க்ரீன் ரீப்பிளேஸ்மென்டையும் வழங்குகிறது.

அடேங்கப்பா என சொல்லவைக்கும் விலையில் 55-இன்ச், 65-இன்ச் ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்த Vu.!

செப்டம்பரில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்

அதேபோல் இந்த எல்ஜி கே42 ஸ்மார்ட்போன் ஆனது மத்திய அமெரிக்கா மற்றும் கரீபியன் பிராந்தியத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பரில் அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த சாதனம் இப்போது பிளிப்கார்ட் மூலம் பிரத்தியேகமாக வாங்குவதற்கு

கிடைக்கும். இது க்ரே மற்றும் க்ரீன் வண்ண விருப்பங்களில் வருகிறது.

சார்ந்த LG UX OS வசதியைக் கொண்டுள்ளது

இந்த ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் மீடியாடெக் எம்டி6762 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, எனவே பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்தளத்தை சார்ந்த LG UX OS வசதியைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

மேலும் 8எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு

இந்த ஸ்மார்ட்போனின் பின்புறம் 13எம்பி மெயின் கேமரா + 5எம்பி சூப்பர்வைடு லென்ஸ் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 8எம்பி செல்பீ கேமரா உட்பட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

 ஒரு ஃப்ளாஷ் ஜம்ப் கட்

இந்த ஸ்மார்ட்போனில் ஒரு ஒரு ஃப்ளாஷ் ஜம்ப் கட் அம்சம் உள்ளது. இது சில இடைவெளிகளுடன் நான்கு ஸ்டில் படங்களை எடுக்க கேமராவை அனுமதிக்கிறது. மேலும் சென்சார்கள் படங்களை எப்போது கைப்பற்றுகிறது என்பதைக் குறிக்க ஃபிளாஷ் பயன்படுத்துகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

புளூடூத் 5.0, மைக்ரோ

4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ்/ க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் AI கேம் அம்சமும் உள்ளது, இது செயற்கை நுண்ணறிவு (AI) ஆதரவு வழிமுறைகளைப் பயன்படுத்துகிறது.

3ஜிபி ரேம் மற்றும் 64

எல்ஜி கே42 ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் உடன் வருகிறது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் 3டி சவுண்ட் எஞ்சின் இடம்பெற்றுள்ளது மற்றும் இது பிரத்யே கூகுள் அசிஸ்டென்ட பட்டனையும் கொண்டுள்ளது. பின்பு 3ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட இந்த சாதனத்தின் விலை ரூ.10,990-ஆக உள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG K42 with 6.6-inch Display Launched: Specs, Features and More: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X