சத்தமில்லாமல் மலிவு விலையில் LG K31 ஸ்மாட்போனை அறிமுகம் செய்த எல்ஜி நிறுவனம்!
எல்ஜி நிறுவனம் தனது புதிய மலிவு விலை ஸ்மார்ட்போன் மாடலை சத்தமில்லாமல் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. LG K31 என்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை டூயல் கேமரா அம்சத்துடன் தனது வலைத்தளம் வழியாக நிறுவனம் தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விலை மற்றும் முழு விபரத்தைப் பார்க்கலாம்.

எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன்
ஸ்மார்ட்போன் சந்தையில் பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்களுக்கு தான் இப்பொழுது மவுசு அதிகமாகவுள்ளது. இதை உணர்ந்த எல்ஜி நிறுவனம் தற்பொழுது எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் மாடலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்துள்ளது. எல்ஜி கே 31 ஸ்மார்ட்போனில் 5.7' இன்ச் எச்டி பிளஸ் கொண்ட 720 x 1520 பிக்சல்கள் மற்றும் 18.9: 9 விகித நாட்ச் ஃபுல்விஷன் டிஸ்ப்ளேயுடன் வருகிறது. இது பின்புறமாகப் பொருத்தப்பட்ட கைரேகை ஸ்கேனருடன் வருகிறது.

ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6762 பிராசஸர்
இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரியுடன், ஆக்டா கோர் மீடியாடெக் எம்டி 6762 பிராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 32 ஜிபி வரை சேமிப்பும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இடது பக்கத்தில் பிரத்தியேக Google அசிஸ்டன்ட் பட்டனையும் நிறுவனம் ஸ்மார்ட்போனுடன் இணைத்துள்ளது.

கேமரா
எல்ஜி கே 31 ஸ்மார்ட்போனின் பின்பக்கத்தில் 13 மெகாபிக்சல் சென்சார் கொண்ட எஃப் / 1.8 துளை மற்றும் 5 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் சென்சார் எஃப் / 2.2 துளை கொண்ட இரட்டை கேமரா அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்திற்கு, செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு எஃப் / 2.2 துளை கொண்ட 5 மெகாபிக்சல் செல்ஃபி ஷூட்டர் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி
எல்ஜி கே 31 ஸ்மார்ட்போனில், 3000 எம்ஏஎச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது. இது ஆண்ட்ராய்டு 10 இல் இயங்குகிறது. இணைப்பு முன்னணியில், இது 4 ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் 5.0, மைக்ரோ யுஎஸ்பி போர்ட், ஜிபிஎஸ் / க்ளோனாஸ் மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றை ஆதரிக்கிறது. ஸ்மார்ட்போன் 147.82x71.12x8.63 மிமீ அளவோடும் 146 கிராம் எடையோடும் வருகிறது.

விலை
சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய எல்ஜி கே 31 ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக அமெரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு வேரியண்ட் ஆக வெறும் 149.99 அமெரிக்க டாலர் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய மதிப்பின்படி இது தோராயமாக ரூ. 11,228 என்ற விலையில் விரைவில் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications