Home
Mobile

13எம்பி ரியர் கேமராவுடன் எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

டூயல் சிம், வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகப்படுத்தியுள்ளத எல்ஜி நிறுவனம், மேலும் இந்த ஸ்மார்டபோனின் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பட்ஜெட் விலையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது.

13எம்பி ரியர் கேமராவுடன் எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் பொதுவாக 5.3-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்1280 x 720 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

எல்ஜி கே30 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 425 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி கே30 ஸ்மார்ட்போன்.

13எம்பி ரியர் கேமராவுடன் எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக வீடியோ கால் அழைப்புகள் மற்றும் ஆப் பயன்பாட்டிற்கு மிக அருமையாக இருக்கும் இந்த சாதனம்

இந்த ஸ்மார்ட்போனில் 13எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 5மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

How to check PF Balance in online (TAMIL)

டூயல் சிம், வைபை 802.11, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல். மேலும் எல்ஜி கே30 ஸ்மார்ட்போனில் 2800எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.

13எம்பி ரியர் கேமராவுடன் எல்ஜி கே30 ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி கே30 ஸ்மார்ட்போனின் இந்திய விலை மதிப்பு ரூ.14,998-ஆக உள்ளது, விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய பல தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
LG K30 Entry Level Smartphone With 13MP Rear Camera Goes Official; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X