5.7-இன்ச் டிஸ்பிளேவுடன் எல்ஜி கே12 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது.
தென்கொரியாவில் எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி கே12 பிளஸ் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போன் மாடல் சாம்பல், நீலம், கருப்பு போன்ற நிறங்களில் வெளிவரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீடு பற்றிய தகவல் வரவில்லை, மேலும் எல்ஜி கே12 பிளஸ் சாதனத்தின் பின்புறம் ஒற்றை கேமரா மட்டுமே இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
எல்ஜி கே12 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடல் பொதுவாக 5.7-இன்ச எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே மற்றும் 720 பிக்சல் திர்மானம் அடிப்படையில் வெளிவரும், பின்பு சிறந்த பாதுகாப்பு வசதியைக் கொண்டுள்ளது இந்த
அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

சிப்செட்:
எல்ஜி கே12 பிளஸ் சாதனத்தில் ஆக்டோ-கோர் மீடியாடெக் ஹீலியோ பி22 எஸ்ஒசி சிப்செட் வசதி மற்றும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம் அடிப்படையாக கொண்டு இந்த சாதனம் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சேமிப்பு:
இந்த ஸ்மார்ட்போன் மாடல் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரியைக் கொண்டுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது. குறிப்பாக எல்ஜி கே12 பிளஸ் சாதனத்தின் பின்புறம் கைரேகை சென்சார் உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேமரா:
எல்ஜி கே12 பிளஸ் ஸ்மார்ட்போன் பொதுவாக 16எம்பி ரியர் கேமரா மற்றும் 8எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும்,
பின்பு எல்இடி பிளாஸ் ஆதரவு, செயற்கை நுண்ணறிவு அம்சம் போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில்
இடம்பெற்றுள்ளது.

பேட்டரி -விலை:
எல்ஜி கே12 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு இந்த சாதனத்தின் இந்திய விலை மதிப்பு ரூ.21,000-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications