ஜூலையில் 1 மில்லியன் எல்டிஇ ஸ்மார்ட்போன்களை விற்ற எல்ஜி!

By Karthikeyan
|
ஜூலையில் 1 மில்லியன் எல்டிஇ ஸ்மார்ட்போன்களை விற்ற எல்ஜி!

4ஜி எல்டிஇ நெட்வொர்க் வளர்ந்து வருவதால் எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் அதற்கான பலனை அனுபவித்து வருகிறது. அதாவது தென் கொரியாவைச் சேர்ந்த எல்ஜி நிறுவனம் இதுவைர 5 மில்லியன் எல்டிஇ ஸ்மார்ட்போன்களை விற்று இருப்பதாகவும், குறிப்பாக கடந்த ஜூலை மாதம் மட்டும் தனது 1 மில்லியன் எல்டிஇ ஸ்மார்ட்போன்களை விற்றுத் தீர்த்திருப்பதாகவும் அறிவித்திருக்கிறது.

எல்ஜியின் ஆப்டிமஸ் எல்டிஇ உலகின் முதல் எச்டி எல்டிஇ ஸ்மார்ட்போன் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனுக்கு உலக அளவில் ஏகோபித்த வரவேற்பு நிலவுகிறது.

அமெரிக்கா, ஜப்பான, ஐரோப்பா மற்றும் ஆசிய சந்தைகளில் எல்ஜியின் 10 வகையான எல்டிஇ ஸ்மார்ட்போன்கள் கிடைப்பதாக எல்ஜி கூறுகிறது. இந்த எல்டிஇ போன்களின் விற்பனை வரும் காலங்களில் கணிசமான அளவில் அதிகரிக்கும் என்றும் எல்ஜி எதிர்பார்க்கிறது.

ஏனெனில் கடந்த வருடம் முதல் இந்த எல்டிஇ ஸ்மார்ட்போன்களின் விற்பனை 10 மடங்கு அதிகரித்திருப்பதாக எல்ஜி கூறுகிறது. அதனால் வரும் காலங்களில் பல புதிய எல்டிஇ ஸ்மார்ட்போன்களை களமிறக்கப் போவதாகவும் எல்ஜி கூறுகிறது.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி ஸ்மார்ட்போன் விற்பனையில் எல்ஜி 5 இடத்தில் இருக்கிறது. அதோடு இந்த ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சந்தையில் 3.4 சதவீத பங்கை வைத்திருக்கிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X