ரூ.19,990-விலையில் விற்பனைக்கு வரும் டூயல் ஸ்கிரீன் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன்.!
வரும் அக்டோபர் 16-ம் தேதி பிளிப்கார்ட் வலைதளத்தில் பிக் பில்லியன் டேஸ் எனும் சிறப்பு தள்ளுபடி விற்பனை துவங்க உள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்படும். குறிபபாக ஸ்மார்ட்போன்கள், லேப்டாப், உள்ளிட்ட
சாதனங்களை கம்மி விலையில் வாங்க முடியும்.

தற்சமயம் வெளிவந்துள்ள தி மொபைல் இந்தியன் வலைதளத்தின் தகவல்படி டூயல் ஸ்கிரீன் கொண்ட எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் ஆனது ரூ.19,990-விலையில் விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் மாடல்ரூ.49,999-விலையில் அறிமுகம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதன் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்


Click it and Unblock the Notifications