Home
Mobile

டூயல் ரியர் கேமராவுடன் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை பேர்லினில் நடக்கும் IFA 2019-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது. விரைவில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அட்டகாசமான டிஸ்பிளே

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக்கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்தஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

அசத்தலான சிப்செட் வசதி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

சேமிப்பு வசதி

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

டூயல் ரியர் கேமரா:

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் என டூயல்ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

பேட்டரி மற்றும் இணைப்பு ஆதரவுகள்

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

Best Mobiles in India

English summary
LG G8X ThinQ With 32-Megapixel Selfie Camera Launched and More Details: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X