மீண்டும் விற்பனைக்கு வரும் LG G8X: 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் ஸ்மார்ட்போன்கள் விற்பனை

|

பிளிப்கார்ட் பிக் பில்லியன் தின விற்பனையில் 12 மணிநேரத்தில் 1.75 லட்சம் எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன்கள் விற்கப்பட்டது. இந்த ஸ்மார்ட்போன்களின் கையிருப்பு தீர்ந்த நிலையில் பிளிப்கார்டில் Coming Soon என பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த ஸ்மார்ட்போனின் அடுத்த விற்பனை தேதிக்கு வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்கியூ ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 20 (நேற்று) இரவு 8 மணி முதல் பிளிப்கார்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி8 எக்ஸ் ஸ்மார்ட்போன்

எல்ஜி ஜி8 எக்ஸ் ஸ்மார்ட்போன்

எல்ஜி நிறுவனம் தங்கள் பிரீமியம் எல்ஜி ஜி8 எக்ஸ் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்ததன் மூலம் ரூ.350 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையில் எல்ஜி டூயல் டிஸ்ப்ளே ஸ்மார்ட்போன் விலை குறைப்பு, கேஷ்பேக், விலை இல்லா இஎம்ஐ விருப்பங்கள் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நிறுவனம் 12 மணி நேரத்தில் 1.75 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.

பிளிப்கார்ட்டில் Coming Soon பட்டியல்

பிளிப்கார்ட்டில் Coming Soon பட்டியல்

இந்த ஸ்மார்ட்போன் ஆரம்பத்தில் ரூ.49,999 என்ற விலையில் விற்கப்பட்டது. பண்டிகை தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.19,900 என விற்கப்பட்டு வந்தது. ஸ்மார்ட்போன்கள் கையிருப்பு தீர்ந்த நிலையில் பிளிப்கார்ட்டில் Coming Soon(விரைவில் வரும்) என பட்டியலிடப்பட்டது. இந்த பட்டியலில் இதன் விலை ரூ.21,990 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது.

எல்ஜி ஜி8எக்ஸ் தின்கியூ ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனை

எல்ஜி ஜி8எக்ஸ் தின்கியூ ஸ்மார்ட்போன் மீண்டும் விற்பனை

இதையடுத்து எல்ஜி ஜி8எக்ஸ் தின்கியூ ஸ்மார்ட்போன் விற்பனை எப்போது தொடங்கும் என வாடிக்கையாளர்கள் காத்திருந்தனர். இந்த நிலையில் எல்ஜி ஜி8எக்ஸ் தின்கியூ ஸ்மார்ட்போன் விற்பனை அக்டோபர் 20 (நேற்று) இரவு 8 மணி முதல் பிளிப்கார்டில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது.

6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

6.4-இன்ச் எஃப்எச்டி பிளஸ் டிஸ்ப்ளே

எல்ஜி ஜி8எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போன் 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் விற்கப்படுகிறது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

இனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi!இனி டேட்டா வீணாகும் கவலை வேண்டாம்.. வீக்கெண்ட் டேட்டா ரோல்ஓவர் அறிமுகம் செய்த Vi!

ஆண்ட்ராய்டு 9 பை வசதி

ஆண்ட்ராய்டு 9 பை வசதி

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியை இந்த ஸ்மார்ட்போன் கொண்டுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் இயக்கப்படுவதால் இதை பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும் என கூறப்படுகிறது.

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு

6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி சேமிப்பு

எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்புக்கான ஸ்லாட் வசதியும் இதில் இருக்கிறது.

32 எம்பி செல்பி கேமரா

32 எம்பி செல்பி கேமரா

எல்ஜி ஜி8 எக்ஸ் தின்க்யூ ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைட் ஆங்கிள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, பின்பு 32 எம்பி செல்பி கேமரா, எல்இடி பிளாஸ் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
LG G8X Thinq Smartphone Sale Restart in Flipkart

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X