இந்தியா: மிரட்டலான எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!
எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை பேர்லினில் நடந்த IFA 2019-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. அதனை தொடர்ந்து தற்போது இந்தியாவில் இந்த எல்ஜி ஜி8எக்ஸ் ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் நாளை முதல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின் சிற்பம்சங்களைப் பார்ப்போம்.

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் டிஸ்பிளே
எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

ஸ்னாப்டிராகன் 855
இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு
எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் சாதனத்தில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபிஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

32எம்பி செல்பீ கேமரா
எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

4000எம்ஏஎச் பேட்டரி
இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ, என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் விலை
6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்ட இந்த எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனின் விலை ரூ.49,999-ஆக உள்ளது.


Click it and Unblock the Notifications