விரைவில் விற்பனைக்கு வரும் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன்.!

|

எல்ஜி நிறுவனம் தனது எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் மாடலை பேர்லினில் நடக்கும் IFA 2019-நிகழ்ச்சியில் அறிமுகம் செய்தது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன் மாடல் சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

 நவம்பர் 1-ம் தேதி

நவம்பர் 1-ம் தேதி

மேலும் வரும் நவம்பர் 1-ம் தேதி முதல் பிரேசில், ஜப்பான்,ஜெர்மனி, மெக்சிகோ, ஸ்பெயின் மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் விற்பனைக்கு வரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்தியாவில் எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் மாடல் ஆனது விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த சாதனத்தின் சிறப்பம்சங்களைப் பார்ப்போம்.

 2340 x 1080 பிக்சல் திர்மானம்

2340 x 1080 பிக்சல் திர்மானம்

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.4-இன்ச் எப்எச்டி பிளஸ் ஒஎல்இடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 2340 x 1080 பிக்சல் திர்மானம் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் இன்-டிஸ்பிளே-கைரேகை ஸ்கேனர், டூயல் ஸ்கிரீன், வாட்டர் டிராப் அம்சம் என பல்வேறு வசதிகள் இந்த ஸ்மார்ட்போனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 180 டிகிரி கோணங்களில் இந்த சாதனத்தை பயன்படுத்த முடியும்.

மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!மூன்று ரியர் கேமரா ஆதரவுடன் மெய்ஸூ 16டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

ஆண்ட்ராய்டு 9பை

ஆண்ட்ராய்டு 9பை

இந்த ஸ்மார்ட்போன் மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 என்எம் ஆக்டோ-கோர் பிராசஸர் உடன் அட்ரினோ 640ஜிபியு வசதியுன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

6ஜிபி/8ஜிபி ரேம்

6ஜிபி/8ஜிபி ரேம்

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் சாதனத்தில் 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றுள்ளது, பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவந்துள்ளது.

தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!தரமான ஒன் ப்ளூடூத் இயர்போன் அறிமுகம்: விலை இவ்வளவு தான்.!

 32எம்பி செல்பீ கேமரா

32எம்பி செல்பீ கேமரா

எல்ஜி ஜி8எக்ஸ் திங்க் ஸ்மார்ட்போனில் 12எம்பி பிரைமரி சென்சார் + 13எம்பி வைடு ஆங்கள் லென்ஸ் என டூயல் ரியர் கேமரா பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு 32எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு அம்சங்கள் இந்த ஸ்மார்ட்போனில் இடம்பெற்றுள்ளன.

 4000எம்ஏஎச் பேட்டரி

4000எம்ஏஎச் பேட்டரி

இந்த சாதனத்தில் 4000எம்ஏஎச் பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது, பின்பு குவால்காம் குவிக் சார்ஜ் 3.0 வசதி, வைஃபை, 4ஜி வோல்ட்இ,
என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். மேலும் இந்த சாதனத்தின்ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.46,630-ஆக உள்ளது.

Best Mobiles in India

English summary
LG G8X ThinQ global roll begins November 1, price revealed: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X