வியக்கவைக்கும் விலையில் விற்பனைக்கு வரும் எல்ஜி ஜி8.!
இக்கருவி குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது.
இந்திய சந்தையில் விரைவில் எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் சில அம்சங்கள் மற்றும் விலை பற்றிய தகவலை வெளியிட்டுள்ளது எல்ஜி நிறுவனம்.

எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யும் எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன் மாடல் ரூ.64,317 விலையில் விற்பனைக்கு வரும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, பின்பு இந்த ஸ்மார்ட்போனின் வடிவமைப்புக்கும், மென்பொருள் அம்சத்திற்கும் அதிக கவனம் செலுத்தியுள்ளது எல்ஜி நிறுவனம்.
எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் வாட்டர் டிராப் நாட்ச் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 19.5:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கருவி குவால்காம் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855சிப்செட் வசதியைக் கொண்டுள்ளது, பின்பு ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளம் இவற்றுள் இடம்பெற்றுள்ளதால் பயன்படுத்துவதற்கு மகிவும் அருமையாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் மூன்று ரியர் கேமரா அமைப்பு மற்றும் அதிக மெகாபிக்சல் கொண்ட செல்பீ கேமராவும் இடம்பெற்றுள்ளது, குறிப்பாக 3டி அம்சம் மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சம், எல்இடி பிளாஷ் ஆதரவுகளுடன் இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும்.

குறிப்பாக 4000எம்ஏஎச் பேட்டரி ஆதரவு கொண்டு எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன் வெளிவரும் பின்பு 3.5எம்எம் ஆடியோ ஜாக், என்எப்சி, யுஎஸ்பி டைப்-சி போர்ட், போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.
எல்ஜி ஜி8 ஸ்மார்ட்போன் பொதுவாக 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும், பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications