டூயல் செல்பி & ட்ரிபிள் கேமரா கொண்ட மிரட்டலான எல்ஜி ஜி8 திங்க்.!
எல்ஜி நிறுவனம் அண்மையில் எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
எல்ஜி நிறுவனம் அண்மையில் எல்ஜி வி40 திங்க் ஸ்மார்ட்போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.
அதனைத் தொடர்ந்து தற்பொழுது எல்ஜி நிறுவனம் தனது அடுத்த புது மாடல் எல்ஜி ஜி8 திங்க் ஸ்மார்ட்போனை இந்தியாவில் பிப்ரவரி 24 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது.

மொபைல் வேல்ட் காங்கிரஸ் 2019
இந்த புதிய ஸ்மார்ட்போன் மாடலை இந்த வருடத்தில் நடைபெறவிருக்கும் மொபைல் வேல்ட் காங்கிரஸ் 2019 இல் அறிமுகம் செய்யவுள்ளதாக எல்ஜி நிறுவனம் அறிவித்துள்ளது.

புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்
அதுமட்டுமின்றி நோக்கியா, சோனி, சாம்சங், ஒப்போ மற்றும் விவோ நிறுவனங்களின் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களும் எல்ஜி ஜி8 திங்க் போனுடன், மொபைல் வேல்ட் காங்கிரஸ் 2019 நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்படுமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

எல்ஜி ஜி8 திங்க்
எல்ஜி ஜி8 திங்க் ஸ்மார்ட்போன் 8 மெகா பிக்சல் கேமரா உடன் கூடிய 5 மெகா பிக்சல் டூயல் செல்பி கேமரா உடன் அறிமுகம் செய்யபடமென்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் இல் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் கூடிய 6ஜி ரேம் மற்றும் 128 ஜிபி உள்ளடக்கச் சேமிப்பு வேரியண்ட் மாடல்கள் அறிமுகம் செய்யப்படுமென்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

விலை
எல்ஜி ஜி8 திங்க் ஸ்மார்ட்போன் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெஸிஸ்டண்ட் சான்றிதழுடன் கூடிய 3300 எம்.ஏ.எச் பேட்டரியுடன் அறிமுகம் செய்யப்படும். எல்ஜி ஜி8 திங்க் ஸ்மார்ட்போன் இந்தத் துவக்க வேரியண்ட் இந்தியாவில் ரூ.49,953 என்ற விலையில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications