தற்சமயம் எல்ஜி ஜி7 தின்க் சாதனத்தின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அமெரிக்காவில் முதற்கட்ட சோதனைகளில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் மாடல் எண் எல்எம்-ஜி710எம் என்று
தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்வீன், பாண்டியா, ரோஹித் சர்மா கலந்துகொள்ள கலைக்கட்டிய எப்7 வெளியீடு.!
குறிப்பாக இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் மாடல் மே மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது,மேலும் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவரும் என எதிர்பார்க்ப்படுகிறது.
எல்ஜி ஜி7 தின்க் :
எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x3120 பிக்சல்
தீர்மானம் கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.
ஆண்ட்ராய்டு ஓரியோ:
எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன்.
நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
16எம்பி ரியர் கேமரா:
இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.
இணைப்பு ஆதரவுகள்:
கைரேகை சென்சார், டூயல்-சிம், ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக்
போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் சான்றிதழ் கொண்டுள்ளது
எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன்.
3000எம்ஏஎச்:
எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்விலைப் பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.
Gizbot இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.Subscribe to Tamil Gizbot.