லீக் ஆனதோ எல்ஜி ஜி7 புகைப்படங்கள்; ஷாக் ஆனதோ ஆப்பிள்; ஏன்.?

வெளியான புகைப்படங்களானது, எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை கணிக்க போதுமானதாக உள்ளது.

|

எதிர்பார்த்தபடி, மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2018 நிகழ்வில் அறிவிக்கப்படாத, எல்ஜி நிறுவனத்தின் அடுத்த தலைமை ஸ்மார்ட்போன் ஆன ஜி7, மிக விரைவில் வெளியாகவுள்ளது என்கிற தகவல் கிடைத்துள்ளது. சுவாரசியம் என்னவென்றால், எல்ஜி நிறுவனத்திடம் இருந்து மிக நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட இந்த ஸ்மார்ட்போன் ஆனது எல்ஜி ஜி7 தின்க் (ThinQ) என்ற பெயரின்கீழ் வெளியாகவுள்ளது.

லீக் ஆனதோ எல்ஜி ஜி7 புகைப்படங்கள்; ஷாக் ஆனதோ ஆப்பிள்; ஏன்.?

கூறப்படும் ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மற்றும் முக்கிய அம்சங்கள் இப்போதுவரை வெளியாகவில்லை என்றாலும் கூட, டெக்ரேடார் தளம் வழியாக இரண்டு லீக்ஸ் புகைப்படங்களில் அது அப்பட்டமாக சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐபோன் எக்ஸ் போன்ற வடிவமைப்பை கொண்டுள்ளது. வெளியான புகைப்படங்களானது, எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் சில அம்சங்களை கணிக்க போதுமானதாக உள்ளது.

மாடல் எண் எல்ஜி-ஜி 710டிஎம் என்கிற பெயரின்கீழ் காணப்படும் எல்ஜி ஜி7 ஆனது 6.1 இன்ச் அளவிலான டிஸ்பிளேவை கொண்டுள்ளது. அமெரிக்காவில் சோதனை கட்டத்தில் இறக்கும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பம்சமானது அதன் பெஸல்லெஸ் புல்வியூ டிஸ்பிளேவாகத் தான் இருக்கும். மேலும் புகைப்படத்தின் வழியாக, எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில், நோட்டிபிகேஷன் எல்இடி லைட் ஒன்றையும், ஒரு செல்பீ கேமராவையும் காணமுடிகிறது.

எல்ஜி ஜி7-ன் இதர வடிவமைப்பு விவரங்களை பொறுத்தவரை, இடது பக்கத்தில் பவர் பட்டனை கொண்டுள்ளது, மறுபக்கத்தில் பக்கவாட்டாக அமைக்கப்பெற்றுள்ள ஒரு அர்ப்பணிகப்பட்ட ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் பட்டன் ஒன்றும் உள்ளது. வெளியான தகவல் உண்மையானால், எல்ஜி ஜி 7 தின்க் ஆனது க்வால்காம் ஸ்னாப்டிராகன் 845எஸ்ஒசி உடனான ஒரு 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்க சேமிப்பு கொண்டு இயங்கும்.

லீக் ஆனதோ எல்ஜி ஜி7 புகைப்படங்கள்; ஷாக் ஆனதோ ஆப்பிள்; ஏன்.?

உடன், எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் 360 டிகிரி வீடியோ ஆதரவு, எல்இடி ப்ளாஷ் கொண்ட ஒரு செங்குத்தான டூயல் கேமரா அமைப்பு, பின்புறத்தில் ஒரு கைரேகை ஸ்கேனர், சாதனத்தின் கீழ் இடது பக்கத்தில் ஒரு 3.5மிமீ ஹெட்ஜாக், ஒரு யூஎஸ்பி டைப்-சி போர்ட் மற்றும் ஒரு ஸ்பீக்கர் கிரில் ஆகியவைகளை கொண்டுருக்கலாம். இடதுபுறத்தில், பவர் மற்றும் லாக் கீ பட்டன்கள் இருக்க, வலது பக்கத்தில், வால்யூம் ராக்கர்ஸ், ஒரு பிரத்யேக பெர்சனல் அசிஸ்டென்ட் அணுக அனுமதிக்கும் (சந்தேகத்திற்கிடமான பட்டன்) உட்பட மொத்தம் மூன்று பட்டன்கள் உள்ளன.

Best Mobiles in India

English summary
LG G7 ThinQ Leaked Real-Life Images Suggest an Apple iPhone X-Like Notch. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X