எல்ஜி ஜி7 திங்க்: எல்ஜி ஃபோன்களில் சிறப்பான ஒன்று: விமர்சனம்.!

நவீன ஆன்ட்ராய்டு வி.8.1 ஓரியோ-வில் இயங்கும் ஜி7 திங்க், எல்ஜி நிறுவனத்தின் சொந்தமான யூஎக்ஸ் மூலம் அதற்கே உரிய உருவம், அமைப்புகள் மற்றும் வழக்கமான அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது.

|

ஏற்கனவே வெளியான வி30எஸ் திங்க் ஸ்மார்ட்போன் உடன் ஒப்பிடும் போது, ஜி7 திங்க் ஃபோனில் அவ்வளவு பெரிய அளவிலான மேம்பாடுகள் செய்யப்படவில்லை என்றாலும், காலத்திற்கேற்ற மேம்பாட்டை கொண்ட ஃபோனாக திகழ்கிறது. எனவே எல்ஜி ஜி7 திங்க் ஸ்மார்ட்போனை குறித்து இந்தக் கட்டுரையில் காண்போம்.

எல்ஜி ஜி7 திங்க்: எல்ஜி ஃபோன்களில் சிறப்பான ஒன்று: விமர்சனம்.!

இந்த எல்ஜி ஜி7 ஃபோனின் வடிவமைப்பில் குறிப்பிடத்தக்க கிளாஸ் கலவை உடன் மெட்டல் பிரேம் ஆகியவை காணப்படுகிறது. தனது வி30எஸ் ஃபோனில் இருந்த கவர்ந்திழுக்கும் சாயல்களை எடுத்து இந்தப் புதிய ஃபோனில் அளித்துள்ள எல்ஜி நிறுவனம், புதிய அயூரோரா பிளாக் என்ற நிற வகையை அறிமுகம் செய்துள்ளது. இது தவிர, புதிய மோரோக்கன் ப்ளூ, புதிய பிளாட்டினம் க்ரே மற்றும் ராஸ்ப்பேர்ரி ரோஸ் ஆகிய நிறங்களிலும் கிடைக்கிறது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

வழக்கமான மற்ற எல்ஜி ஃபோன்களில் உள்ளது போன்ற டிஸ்ப்ளே இல்லாவிட்டாலும், தற்போதைய பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் உள்ள தன்மையை ஜி7-லும் காண முடிகிறது. ஆனால் இதன் எல்சிடி திரை 19.5:9 என்ற அளவில் உயர்ந்த விகிதத்தில் அமைந்துள்ளது. சிறிய பேசில்கள் என்றாலும், ஆர்ஜிபிடபிள்யூ பென்டைல் மேட்ரிஸ் மூலம் உயர்தர ஒளிர்வை அளித்து, 1000 நைட்ஸ் வரை கொண்டு ஓஎல்இடி-யைப் போல சூரிய ஒளியிலும் தெளிவாகத் தெரிகிறது.


இதில் 3,120 x 1,440 பிக்சல் பகுப்பாய்வு என்பது மட்டுமே ஒரு பிரச்சனையாகத் தெரிகிறது. இந்தப் பிரச்சனையைத் தவிர, திரை நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. ஏறக்குறைய தட்டையான கொரில்லா கிளாஸ் மூலம் மூடப்பட்ட திரை, கிடைப்பதற்கு அரிய 2.5டி பணிமுடிவைப் பெற்றுள்ளது. இதில் நிறங்கள் தத்ரூபமாக தெரிவதோடு, நன்கு ஒளிரவும் செய்கிறது.


இயர்பீஸ் வைக்கப்பட்டுள்ள இடத்தை பார்த்து, சில பயனர்களுக்கு அதிருப்தி ஏற்படலாம். அந்த இடத்தில் செல்ஃபீ கேமரா அமைந்துள்ளது. இதனால் பல்வேறு சென்ஸர்கள் இடதுபக்கத்திலும், இயர்பீஸ் கிரில் வலதுபக்கத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.

4டி வளைந்த கிளாஸ்

4டி வளைந்த கிளாஸ்

ஜி6-ல் இருப்பதை விட, ஜி7-ல் உள்ள அலுமினியம் பிரேம் மெல்லியதாக உள்ளது. முன்பக்கம் மற்றும் பின்பக்க கிளாஸ் பேனல்களை நோக்கி சற்று வளைந்ததாக அமைந்துள்ளது. 4டி வளைந்த கிளாஸ் துண்டுகளில் ஒன்று மூலம் பின்பக்க உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் நான்கு முனைகளையும் நோக்கி வளைந்து காணப்படுகிறது. இதன்மூலம் உண்மையைக் காட்டிலும் ஜி7 மெல்லியதாகத் தெரிவது, இதற்கு அழகை கூட்டுகிறது.

வழக்கமான எல்ஜி ஃபோன்களைப் போல, இதிலும் கைரேகை ஸ்கேன்னர் பின்பக்கத்தில் அமைந்துள்ளது. ஆனால் ஜி சீரியஸில் இதுவரை இல்லாத வழக்கமாக, அது பவர் ஆன்/ லாக் செய்யும் கீ ஆக செயல்படுவதில்லை. வெறும் ஒரு பயோமெட்ரிக் சென்ஸர் அவ்வளவுதான். அதற்கு பதிலாக, ஜி7-னின் வலதுபக்கத்தில் பவர் ஆன் கீ அளிக்கப்பட்டுள்ளது.

லென்ஸ்கள்

லென்ஸ்கள்

ஜி சீரியஸில் முதல் முறையாக, ஜி7-னின் பின்பக்கத்தில் இரட்டை கேமரா அமைந்துள்ளது. சென்ஸர்கள் மற்றும் லென்ஸ்கள் முறையே, 16எம்பி + 16 எம்பி உடன் எஃப்/1.6 வழக்கமான லென்ஸ் மற்றும் எஃப்/1.9 மிகவும் விரிந்த கோணத்தில் அமைந்த லென்ஸ் என்று வகையில் உள்ளன. விரிந்த கோணத்தில் கேமராவில் பகுப்பாய்வு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஃபோனின் அடிப்பகுதியில் உள்ள ஃபூம்பாக்ஸில் இருந்து சத்தமான ஒலியை வெளியிடுகிறது. ஜி7-ல் சத்தத்தை மிகைப்படுத்துவதற்கான வெற்றிடத்தை காண முடிகிறது.

சில முன்னணி ஃபோன்களில் உள்ள ஓஎல்' 3.5மிமீ ஜெக்-கை பெற்று, இஎஸ்எஸ்-ல் இருந்து ஒரு உயர்தர 32 பிட் ஹை-ஃபை குவாட் டிஏசி மூலம் இணைந்து, டிடிஎக்-எக்ஸ் கோடிக் மூலம் நிறைவை அளிக்கிறது. மேலும் முதல் முறையாக ஸ்மார்ட்போனில் 7.1 சுற்றுப்புற ஒலியைப் பெற்றுள்ளது.

வெப்பம், பனி மற்றும் நீர்த்துளிகள்

வெப்பம், பனி மற்றும் நீர்த்துளிகள்

இதில் உள்ள புதிய சிப்செட், மைக்குகள் மற்றும் கூகுள் ஏஐ ஆகியவை மூலம் 5 மீட்டர் தூரத்தில் சத்தமான சூழ்நிலையில் நீங்கள் இருந்தால் கூட, உங்கள் குரலை தெளிவாக கண்டறிந்து, கூகுள் அசிஸ்டென்ஸைஉடனடியாக அளிக்கிறது.


அதன் கிளாஸ் வடிவமைப்பு மற்றும் அதில் செய்யப்பட்டுள்ள பெயிண்ட் பணிகளை எண்ணி மகிழ்ச்சி அடைவதோடு, நம்பிக்கை அளிப்பதாக உள்ளது. இதனுடன் நீர் தடுப்பில், ஐபி68 புள்ளிகளைப் பெற்றுள்ளதோடு வெப்பம், பனி மற்றும் நீர்த்துளிகள் போன்ற தவிர்க்க முடியாத சூழ்நிலைகளில் எம்ஐஎல்-எஸ்டிடி-810ஜி அளவிலான பயனை அளிக்கிறது.

 சிப்செட்

சிப்செட்

எல்ஜி ஜி7-ல் ஆக்டா-கோர் க்ரையோ செயலி, அட்ரினோ 630 ஜிபியூ மற்றும் 6 ஜிபி ரேம் உடன் கூடிய ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் காணப்படுகிறது.

சாஃப்ட்வேர்
நவீன ஆன்ட்ராய்டு வி.8.1 ஓரியோ-வில் இயங்கும் ஜி7 திங்க், எல்ஜி நிறுவனத்தின் சொந்தமான யூஎக்ஸ் மூலம் அதற்கே உரிய உருவம், அமைப்புகள் மற்றும் வழக்கமான அப்ளிகேஷன்கள் ஆகியவற்றை பெற்றுள்ளது. கூகுளின் அசிஸ்டெண்ட் மூலம் ஆற்றலைப் பெறும் 2.0-யை செயற்கை நுண்ணறிவையும் பெற்றுள்ளது.

ஜி7-ல் உள்ள ஒரு நாட்ச்சை, எல்ஜி நிறுவனம் தரப்பில் இரண்டாவது திரை என்று அழைக்கப்படுகிறது. வி10 மற்றும் வி20-ல் இருந்து மேம்படுத்தப்பட்ட இரண்டாவது திரை என்று கூறப்படுகிறது. இது வழக்கம் போல, அறிவிப்பு ஐகான்கள், ஸ்டேட்டஸ் காரியங்கள், கடிகாரம் மற்றும் நெட்வர்க் பார்கள் ஆகியவற்றை கொண்டுள்ளது.

கேமரா

கேமரா

எல்ஜி வி30எஸ் திங்க் ஃபோனில் உள்ளது போன்றே, இதில் ஒரு 16எம்பி முக்கிய கேமரா எஃப்/1.6 லென்ஸ் மற்றும் ஒரு 16எம்பி எஃப்/1.9 உறுதியான ஃபோக்கஸ் கேமரா உடன் 120 கோணத்தில் நன்றாக விரிந்த கோணத்திலான ஸ்னாப்பர் காணப்படுகிறது. முன்பக்க கேமரா எஃப்/2.0 துளை உடன் கூடிய 8எம்பி மற்றும் 82 கோணத்திலான ஒரு வழக்கமான மற்றும் 90 கோணத்திலான விரிந்தது என்று இரு நிலையிலான பார்வை முறைகள் உள்ளன.

இதன் கேமரா அப்ளிகேஷனில் சூப்பர் பிரைட் கேமரா என்ற ஒரு நைட் மோடு காணப்படுகிறது. இதன்மூலம் இருண்ட சூழ்நிலைகளிலும் சிறப்பான புகைப்படங்களை எடுக்க முடிகிறது. மேலும் போர்ட்ரெய்ட் மோடு மூலம் விரிந்த கோணத்திலான கேமரா, ஒரு அழமான சென்ஸராக பயன்படுகிறது.

How To Increase the Speed of your Laptop (TAMIL)
முடிவு

முடிவு

தற்போது சந்தையில் உள்ள கேலக்ஸிகள், பி20-கள், பிக்ஸல்கள், எக்ஸ்பீரியாகள், ஐபோன்கள் ஆகியவற்றை வைத்து பார்க்கும் போது, ஜி7 ஃபோன் விலைக் குறைவாக உள்ளது. நன்றாக விற்பனையாகி வரும் எல்ஜி ஃபோனில் இந்த ஒரு மாற்றம் வரவேற்கத்தக்கது ஆகும்.

Best Mobiles in India

English summary
LG G7 ThinQ hands on review ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X