Subscribe to Gizbot

மே 2: அசத்தலான எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

Written By:

மிகவும் அதிகம் எதிர்பார்த்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் மாடலை வரும் மே மாதம் 2-ம் தேதி அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது எல்ஜி நிறுவனம். மேலும் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்திய மொபைல் சந்தையில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கைரேகை சென்சார், ஹோம் பட்டன் போன்ற பல்வேறு அம்வசங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன்.

மே 2: அசத்தலான எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 1440x3120 பிக்சல் தீர்மானம்
கொண்டவையாக உள்ளது, மேலும் கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்புடன் இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும்.

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது. அதன்பின் ஆண்டராய்டு 8.1 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும் இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன்.

மே 2: அசத்தலான எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ஸ்மார்ட்போன் 4ஜிபி/6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்புஆதரவு
இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய
செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

மே 2: அசத்தலான எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

கைரேகை சென்சார், டூயல்-சிம், ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற  இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது. மேலும் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் சான்றிதழ் கொண்டுள்ளது எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன்.

How to Find a domain easily for your business (TAMIL)

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனின்விலைப்
பற்றிய விவரங்கள் வெளியிடப்படவில்லை.

English summary
LG G7 ThinQ Confirmed to Launch on May 2; Official Press Render Leaked; Read more about this in Tamil GizBot

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot