Home
Mobile

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் 4ஜிபிஃ6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

By Prakash S

எல்ஜி நிறுவனம் மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ஃபிளாக்ஷிப் ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் மாடலை அமெரிக்காவில் அறிமுகம் செய்துள்ளது, இந்த ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிகம் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக அதிக சூரிய வெளிச்சத்திலும் ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் டிஸபிளேவை இயல்பாக பயன்படுத்த முடியும்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் டூயல் கேமரா அமைப்பு இடம்பெற்றுள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போனின் கேமரா இயங்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு குறைந்த வெளிச்சத்தில் கூட சிறந்த புகைப்படங்களை எடுக்கும் தன்மை கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் மாடல். பின்னர் இதில் இடம்பெற்றுள்ள ஏஐ அல்காரிதம் கேமரா செட்டிங்ஸ்-ஐ தானாக மாற்றியமைக்கும் வகையில் உள்ளது.

ஃபிளாக்ஷிப் ஜி7 தின்க் ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சம் என்னவென்றால் சூப்பர் ஃபார் ஃபீல்டு குரல் அங்கிகார வசதியைக் கொண்டுள்ளது, இந்த புதிய வசதி என்னவென்றால் உங்கள் குரலை கூப்பிடு தூரம் வரை பேசினால் மிக எளிமையாக புரிந்து கொள்ளும் தன்மை கொண்டுள்ளது. மேலும் டிடிஎஸ்-எக்ஸ் தொழில்நுட்பம் கொண்ட 3டி சவுண்ட ஆதரவைக் கொடுக்கிறது எல்ஜி ஜி7 தின்க்.

 எல்ஜி ஜி7 தின்க் :

எல்ஜி ஜி7 தின்க் :

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 3120 ஒ 1440 பிக்சல் திர்மானம் மற்றும் 19:5:9 என்ற திரைவிகிதம் கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலுமட ஜி7 தின்க் சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ்5 பாதுகாப்புடன் வெளிவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆண்ட்ராய்டு ஓரியோ:

ஆண்ட்ராய்டு ஓரியோ:

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசிதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். மேலும் கிரே, அரோரா பிளாக், மொராக்கன் புளு, ரேஸ்ப்பெரி ரோஸ் போன்ற
நிறங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வரும்.

 நினைவகம்:

நினைவகம்:

இந்த எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போன் 4ஜிபிஃ6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. ஆப் மற்றும் வீடியோ கால் வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 கேமரா:

கேமரா:

இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி + 16எம்பி டூயல் ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக ஜி7 தின்க் சாதனத்திற்கு IP68 சான்று வழங்கப்பட்டுள்ளது, இதனால் ஸ்மார்ட்போனிற்கு தூசு மற்றும் தண்ணீர் மூலம் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

கைரேகை சென்சார், வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

How to find out where you can get your Aadhaar card (TAMIL GIZBOT)
3000எம்ஏஎச்:

3000எம்ஏஎச்:

எல்ஜி ஜி7 தின்க் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு விற்பனைக்கு வரும் என எதிர்பார்கக்கப்படுகிறது.

Best Mobiles in India

English summary
LG G7 ThinQ announced with focus on AI and audio; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X