Home
Mobile

ஐபோன் எக்ஸ்க்கு போட்டியாக வெளிவரும் எல்ஜி ஜி7.!

ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள செங்குத்தான கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல்.

By Prakash S

மிகவும் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் பல்வேறு தகவல்கள் தற்சமயம் ஆன்லைனில் வெளிவந்துள்ளது, மேலும் ஐபோன் எக்ஸ் வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த அட்டகாசமான எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். கூடிய விரைவில் இந்த எல்ஜி ஜி7 சாதனம் அறிமுகப்படுத்தப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி7 சாதனத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த தொழில்நுட்பம் இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு டூயல் கேமரா மற்றும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற பல்வேறு அம்சங்கள் கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்ஜி ஜி7 சாதனத்தின் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது, மேலும் இந்தஸ்மார்ட்போனில் விலை சற்று உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரிஸ் ஸ்கேனர்:

ஐரிஸ் ஸ்கேனர்:

ஐபோன் எக்ஸ் சாதனத்தில் இடம்பெற்றுள்ள செங்குத்தான கேமரா வடிவமைப்பைக் கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். இக்கருவியின் பின்புற கேமரா 16எம்பி சென்சார் கொண்டுள்ளது எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஐரிஸ் ஸ்கேனர் போன்ற வசதிகள் இடம்பெற்றுள்ளதால் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

 திரைவிகிதம்:

திரைவிகிதம்:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் டிஸ்பிளே வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது, அதன்படி பெசல்-லெஸ் அமைப்பைக் கொண்டுள்ளது இந்த ஜி7 ஸ்மார்ட்போன் மாடல். மேலும் 6.1-இன்ச் முழு எச்டி டிஸ்பிளே மற்றும் 3120 X 1440 பிக்சல் தீர்மானம் கொண்டவையாக உள்ளது இக்கருவி. பின்னர் 19:9 என்ற திரைவிகிதம் அடிப்படையில் இந்த சாதனம் வெளிவரும்.

ஸ்னாப்டிராகன் 845:

ஸ்னாப்டிராகன் 845:

எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இடம்பெற்றுள்ளது, அதன்பின்பு ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் மாடல் வெளிவரும். மேலும் இயக்கத்திற்கு மிக அருமையாக இருக்கும் எல்ஜி ஜி7 சாதனம்.

 சேமிப்பு:

சேமிப்பு:

இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனின் சேமிப்பு பொறுத்தவரையில் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க மெமரி ஆதரவுடன் வெளிவரும். அதன்பின்பு எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இணைப்பு ஆதரவுகள்:

இணைப்பு ஆதரவுகள்:

எல்ஜி ஜி7 மற்றும் எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பிஇ டூயல்-சிம் போன்ற இணைப்பு ஆதரவுகள் இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Translate English to Tamil In your Mobile Easily (GIZBOT TAMIL)
பேட்டரி:

பேட்டரி:

எல்ஜி ஜி7 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3000எம்ஏச் பேட்டரி அமைப்பு இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களின் பல்வேறு தகவல்கள் ஆன்லைனில் வெளிவந்த வண்ணம் உள்ளது.

Best Mobiles in India

English summary
LG G7 Specifications and Renders Leaked Online ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X