பார்த்தால் மட்டும் போதும், அடுத்த கருவியில் எல்ஜி அதிரடி.!
இக்கருவி 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்ஜி நிறுவனம் தற்சமயம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது, அதன்படி எல்ஜி ஜி7 சாதனத்தில் ஐரிஸ் ஸ்கேனர் வழங்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இது தற்சமயம் அனைத்து ஸ்மார்ட்போன் கருவிகளிலும் பரவலாக இருக்கும் கைரேகை ஸ்கேனர் அம்சத்தை மிஞ்சும் அளவு இருக்கும். மேலும் பல்வேறு மென்பொருள் தொழிலநுட்பங்களுடன் இந்த எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போன் வெளிவரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐரிஸ் ஸ்கேனர் கண்ணின் பயோமெட்ரிக் சிறப்பியல்புகளை பரிசோதிப்பதாகவும், லேசான திரை மற்றும் இருண்ட திரையை அமைப்பதன் மூலம் வெளிச்சத்தின் அளவை அடிப்படையாகக் கொண்ட கருவி மாற்றங்களின் அளவை மாற்றும் என அறிக்கை கூறுகிறது.
ஐரிஸ் ஸ்கேனர்கள் பொதுவாக அகச்சிவப்பு ஒளி மூலம் வேலை செய்கின்றன. மேலும் இந்த எல்ஜி ஸ்மார்ட்போன் பொறுத்தவரை பெசல்லெஸ் டிஸ்பிளே மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களுடன் வெளிவரும் எனத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

டிஸ்பிளே :
இக்கருவி 5.8-இன்ச் க்யுஎச்டி பிளஸ் டிஸ்பிளே மற்றும் (2560-1440)பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18:9 என்ற திரை விகிதம் மற்றும் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 630 செயலி இடம்பெற்றுள்ளது, அதன்பின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

நினைவகம்:
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரியை கொண்டுள்ளது, அதன்பின் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

16எம்பி ரியர் கேமரா:
இந்த ஸ்மார்ட்போனில் 16எம்பி ரியர் கேமரா பொருத்தப்பட்டுள்ளது, அதன்பின் 4கே வீடியோ பதிவு செய்ய முடியும்.இதனுடைய செல்பீ கேமரா 8மெகாபிக்சல் எனக் கூறப்படுகிறது. மேலும் எல்இடி ஃபிளாஷ் ஆதரவு இவற்றில் இடம்பெற்றுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட், ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம் எனக் கூறப்படுகிறது.

3500எம்ஏஎச்:
எல்ஜி ஜி7 ஸ்மார்ட்போனில் 3500எம்ஏஎச் பாஸ்ட் சார்ஜ் கொண்ட பேட்டரி பொறுத்தப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications