எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலைதான் கொஞ்சம் ஜாஸ்தி.!
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்க்கது.
எல்ஜி நிறுவனம் தற்சமயம் எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் என்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது, மேலும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சங்கள்,எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே மற்றும் சிறந்த மென்பொருள் தொழில்நுட்பம் இவற்றுள் இடம்பெற்றுள்ளது.

குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனின் ஆடியோ வசதிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது,அதன்படி DTS:X இருப்பதால் விர்ச்சுவல் 3டி சவுன்டு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ வசதி வழங்கப்பட்டுள்ளது என்பது
குறிப்பிடத்தக்கது.

டிஸ்பிளே:
எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் பொதுவாக 6.1-இன்ச் முஐ எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, அதன்பின்பு 19.5:9 என்ற திரைவிகிதம் மற்றும் 3120×1440 பிக்சல் திர்மானம் இவற்றுள் இடம்பெற்றள்ளது. குறிப்பாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்:
எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் மாடல் ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் வசதி இவற்றுள் இடம்பெற்றுள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மெமரி:
இக்கருவி 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டுள்ளது, அதன்பின்பு கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்க்கது. மேலும் ஆப் மற்றும் வீடியோ கேம் போன்ற வசதிகளுக்கு மிக அருமையாக இருக்கும் இந்த ஸ்மார்ட்போன் மாடல்.

கேமரா:
எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் பொறுத்தவரை 16எம்பி+16எம்பி டூயல் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. அதன்பின்பு 8எம்பி செல்பீ கேமரா மற்றும் எல்இடி பிளாஷ் ஆதரவு இவற்றுள் இடம்பெற்றுள்ளது. கைரேகை சென்சார் மற்றும் வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் ஐபி68 வசதிகள் இவற்றுள் அடக்கம் என்ற தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணைப்பு ஆதரவுகள்:
வைபை, ப்ளூடூத், 4ஜி வோல்ட்இ, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி, என்எப்சி, மைக்ரோ யுஎஸ்பி, 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்ற இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன். மேலும் 3000எம்ஏஎச் பேட்டரி இவற்றுள் பொறுத்தப்பட்டுள்ளது.

விலை:
இந்த எல்ஜி ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போனின் ஆரம்ப விலை ரூ.39,990-ஆக உள்ளது, பின்பு ஆகஸ்ட் 10-ம் தேதி முதல் பிளிப்கார்ட் வலைதளத்தில் இந்த ஸ்மார்ட்போன் விற்பனை செய்யப்படும்.


Click it and Unblock the Notifications